இந்தியாவின் வளர்ச்சி இம்புட்டு தான்.. புட்டு புட்டு வைக்கும் ஆய்வுகள்.. கவலையில் மத்திய அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் குறித்த மதிப்பீடுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு தான் உள்ளது.

அதேசமயம் மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஆனால் இன்று வரை பொருளாதாரம் மீண்டதாக தெரியவில்லை. சொல்லப்போனால் முந்தைய காலாண்டில் கண்ட வளர்ச்சியையாவது காணுமா? பொருளாதாரம் மீண்டு எழுமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..!ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..!

இந்தியா நிச்சயம் பாதிக்கப்படலாம்

இந்தியா நிச்சயம் பாதிக்கப்படலாம்

இந்திய பொருளாதாரம் தற்போது தான் சற்றே துளிர் விடத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவில் நிலை கொண்டுள்ள கொரோனா வைரஸ் என்னும் அதி தீவிர வைரஸ் அலை தற்போது உலகம் முழுக்க பரவி வருகிறது. சொல்லப்போனால் உலக நாடுகள் அத்துணையும் பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை எதிர்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் சீனாவின் முக்கிய வர்த்தக பங்காளியான இந்தியாவில் வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜிடிபி கணிப்பு

ஜிடிபி கணிப்பு

இந்த நிலையில் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஏற்கனவே பல முறை, இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை குறைத்துள்ள நிலையில், இன்னும் குறைக்கலாமா? என்று ஆராய்ந்து வருகின்றன. இந்த நிலையில் தான் நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எக்னாமிக் ரிசர்ச் (என்சிஏஇஆர்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.9% ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

முந்தைய கணிப்புகளை விட கணிப்பு
 

முந்தைய கணிப்புகளை விட கணிப்பு

ஏற்கனவே நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளிலும் வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், தற்போது முழு நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதமே 4.9% என கொடுத்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதுவே என்எஸ்ஓ (NSO) அமைப்பாவது 5% ஆக இந்த வளர்ச்சி விகிதத்தினை கணித்திருந்தது. ஆனால் NCAER அதவிட குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி இம்புட்டு தான்

வளர்ச்சி இம்புட்டு தான்

அதே போல் இந்தியப் பொருளாதாரம் கடந்த 2018 - 19ல் 6.1% வளர்ச்சி கண்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 4.9% ஆக இருக்கும் என்றும், அதிலும் குறிப்பாக இந்த வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 4.9% ஆகவும், நான்காவது காலாண்டில் 5.1% ஆகவும் காணப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் 2020 - 21ல் பொருளாதாரம் 5.6% வளர்ச்சி காணும் என்று NCAER தெரிவித்துள்ளது.

இதுவும் காரணமாக இருக்கலாம்

இதுவும் காரணமாக இருக்கலாம்

தேசிய புள்ளியியல் அலுவலகம் நடப்ப நிதியாண்டின் வளர்ச்சி 5% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்த நிலையில், NCAER அதைவிட குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் மூலதன பொருட்கள் மற்றும் நுகர்வோர் நீடித்த பொருட்களின் ஐஐபி குறைந்துள்ளது. நுகர்வோர் அல்லாத நீடித்த பொருட்களும் டிசம்பர் 2019ல் குறைந்து விட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி இறக்குமதியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இந்த வளர்ச்சி விகிதம் குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NCAER estimates India’s GDP growth at 4.9% in 2019 -20

NCAER estimated economic growth for the current fiscal at 4.9%, also 2020-21 next financial year may grow to 5.6%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X