எல்ஐசிக்கு குட்டு வைத்த நுகர்வோர் மன்றம்.. எதற்காக தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : உயர்மட்ட நுகர்வோர் ஆணையம் எல்.ஐ.சியிடம் விதவை பெண்ணிடம் அவரின் கோரிக்கையை நிராகரித்தற்காக 9.3 லட்சம் ரூபாய் செலுத்துமாறு கேட்டுள்ளது.

முந்தைய சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறித்த தகவல்களை பாலிசி தாரர் மறைத்தற்காக அவர்களின் கோரிக்கையை நிராகரித்ததாக எல்.ஐ.சி தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து நேஷனல் கன்சியூமர் டிஸ்பியூட்ஸ் ரெட்பிரஸ்ஷல் கமிஷன் எல்.ஐ.சியின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து, வார்தா மாவட்ட நிகர்வோர் மன்றத்தின் உத்தரவை இது உறுதி செய்தது.

எல்.ஐ.சி நிராகரிப்பு

எல்.ஐ.சி நிராகரிப்பு

மேலும் இறந்த திகம்பராவ் தக்ரேவின் மனைவி உரிமை கோரப்பட்ட நிதியை அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் தாக்ரேயின் இரண்டு கூற்றுக்களை எல்.ஐ.சி நிராகரித்ததாக கூறப்படுகிறது. தாக்ரே பாலிசி எடுப்பதற்கு முன்பு தாக்ரே ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற்று வந்ததை மறைத்ததாக எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சியின் அறிக்கைக்கு எந்த ஆதாராமும் இல்லை

எல்.ஐ.சியின் அறிக்கைக்கு எந்த ஆதாராமும் இல்லை

எனினும் தாக்ரே அந்த குறிப்பிட்ட காலத்தில் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டதற்காக எந்த ஆதாரமும் இல்லை என்றும் நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்படியே அவருக்கு எல்.ஐ.சி குறிப்பிட்டது போல பாதிக்கப்பட்டிருந்தாலும், எல்.ஐ.சி அவருக்கு காப்பீடு வழங்கிய நேரத்தில் அவர் ஆரோக்கியமாக இருந்தார் என்றும் வாதிட்டுள்ளது.

தலவல்கள் மறைப்பா
 

தலவல்கள் மறைப்பா

தாக்ரே கடந்த 2000ம் ஆண்டு எல்.ஐ.சியில் இருந்து மூன்று பாலிசிகளை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த மார்ச் 13 அன்று ஒரு குறுகிய நோயால் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 1999ம் ஆண்டில் தாக்ரேவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்.ஐ.சி வாதிட்டது. மேலும் அவர் சிகிச்சைக்கு முந்தைய தகவல்களையும் எல்.ஐ,.சியிடம் மறைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே எல்.ஐ.சி தாக்ரேவின் காப்பீட்டை மறுத்ததாக கூறப்படுகிறது.

ரத்னாவுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்

ரத்னாவுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்

இந்த நிலையிலேயே தாக்ரேவின் மனைவி ரத்னா நுகர்வோர் மன்றத்தை நாடியுள்ளார். இது கடந்த 2005ல் அவரின் புகாரை அனுமதித்துள்ளது. இந்த நிலையில் ரத்னா கோரிய தொகையை எல்.ஐ.சி செலுத்துமாறும் கூறப்பட்டது. எனினும் இதை மறுத்து எல்.ஐசி மேல் முறையீடு செய்ததாக கூறியுள்ளது. எனினும் இதையெல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து ரத்னாவிற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்துமாறும் எல்.ஐ.சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NCDRC said LIC to pay Rs.9.3 lakh to widow of policyholder

LIC to pay Rs.9.3 lakh to widow of policyholder said NCDRC. Also the commission noted that there was no evidence that Thakre was suffering with any disease.
Story first published: Tuesday, November 19, 2019, 18:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X