திவாலான DHFL நிறுவனத்தைப் பெரும் போட்டி மற்றும் பிரச்சனைகளுக்கு மத்தியில் பிராமல் குருப் ஏல முறையில் கைப்பற்றியது. ஆனால் பிராமல் நிறுவனம் குறிப்பிட்ட தொகை போதுமானதா, DHFL நிறுவனத்தைக் கைப்பற்றத் தகுதியானதா..? என்பதை எல்லாம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தான் முடிவு செய்ய வேண்டும்.

அந்த வகையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தற்போது திவாலான DHFL நிறுவனத்தைக் கைப்பற்ற பிராமல் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை பென்ச்.
ஹெச்.பி சதுர்வேதி மற்றும் ரவிகுமார் துரைசாமி ஆகியோர் அடங்கிய தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மும்பை பென்ச் ஒப்புதல் அளித்த நிலையில் ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளது. என்ன தெரியுமா..?
மும்பை பென்ச் DHFL நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த மொத்த அமைப்பிடம், இந்நிறுவனத்தில் குறைவாக டெப்பாசிட் செய்துள்ளவர்களுக்கு அதிகத் தொகையைக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் வர்த்தக நிலையை உணர்ந்து இதைக் கட்டாயப்படுத்தவில்லை என்றும் மும்பை பென்ச் கேட்டுக்கொண்டு உள்ளது.
DHFL நிறுவனம் திவாலான நிலையில் இந்நிறுவனத் தலைவர் கபில் வந்த்வான் நிறுவனத்தை விற்பனை செய்வதில் இருந்து காப்பாற்றப் பல முயற்சிகள் செய்தால், ஆனால் கடன் கொடுத்தவர்கள் உருவாக்கிய அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் ஏல முறையில் பிராமல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தைக் கைப்பற்ற அதானி குழுமம் கடுமையாக முயற்சி செய்தது ஆனால் தோல்வி அடைந்தது. இந்திய நிறுவனம் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனமும் பெரிய அளவிலான தொகையை அளிக்க முன்வந்தது. ஆனால் கடையில் வென்றது முகேஷ் அம்பானியின் சம்பந்தியின் நிறுவனமான பிராமல் குழுமம் தான்.
DHFL நிறுவனம் சுமார் 90,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்று திவாலானது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications