இந்தியாவின் சிலிக்கான் வேலியாகவும் ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும் பெங்களூரு நகரம் இருக்கிறது. நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் பெங்களூருக்கு சென்று வந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காகவும் தொழில் நிமித்தமாகவும் நாள்தோறும் பெங்களூருக்கு பயணிக்கின்றனர்.
நகரங்களுக்கு இடையே போக்குவரத்து: இவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையிலான ஒரு போக்குவரத்து திட்டம் குறித்து அறிவிப்பு தான் தற்போது வெளியாகி இருக்கிறது. மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு என்று அழைக்கப்படும் ஆர்ஆர்டிஎஸ் , இந்தியாவின் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் என அழைக்கப்படும் என்சிஆர்டிசி-இன் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் நகரங்களுக்கிடையிலான இணைப்பை வலுப்படுத்த ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம்.

முதலில் டெல்லி-மீரட் இடையே வழித்தடம்: முதன்முறையாக 2023 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே முதல் மண்டல விரைவு போக்குவரத்து ரயில்வே தடம் அமைக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது மொத்தம் 82 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் வழித்தடத்தில் 55 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த என்சிஆர்டிசி அமைப்பு பெங்களூரிலும் இதே போன்ற இதேபோல நான்கு வழித்தடங்களில் மண்டல விரைவு ரயில் போக்குவரத்து வழித்தடத்தை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.
பெங்களூரு - தர்மபுரி வழித்தடம்: இதன்படி பெங்களூரு - ஹோஸ்கோடே - கோலார் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் வகையில் 65 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு வழித்தடம் , பெங்களூரு - மைசூர் இடையே 145 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு வழித்தடம், பெங்களூரு - துமகுரு இடையே 60 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு வழித்தடம் என கர்நாடக மாநிலத்திற்கு உள்ளேயே மூன்று வழித்தடங்களும் , பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டை இணைக்க கூடிய வகையில் பெங்களூரு- ஓசூர் -கிருஷ்ணகிரி- தர்மபுரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 138 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு வழி தடமும் அமைக்கலாம் என பரிந்துரை வழங்கி இருக்கிறது.
நமோ பாரத் ரயிலில் பெங்களூரு பயணம்: நமோ பாரத் ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்கலாம் என்றும் இந்த ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடியவை என்றும் அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கு அறிக்கை அளித்து இருக்கும் என்சிஆர்டிசி அதிகாரிகள் தற்போது டெல்லியில் இயங்கும் நமோ பாரத் ரயில்கள் மற்றும் அதன் வழித்தடங்களை வந்து நேரில் பார்வையிடும்படி கூறியுள்ளனர்.
சாட்டிலைட் நகரங்களுடன் இணைப்பு: இந்த முன்மொழியப்பட்டுள்ள வழித்தடங்களை அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுடைய அமைப்பு வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது பெங்களூர் நகரையும் மற்ற சாட்டிலைட் நகரங்களையும் இணைக்கும் வகையில் இந்த மண்டல விரைவு போக்குவரத்து ரயில் வழித்தடம் அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கு என்ன லாபம்?: இதன் மூலம் மைசூர், கோலார் ,துமக்குரு மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து பெங்களூருக்கு இடையிலான பயண நேரம் என்பது கணிசமாக குறையும். அதே வேளையில் இந்த வழித்தடங்களில் நமோ பாரத் ரயில்கள் இயக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பலன் பெறுவார்கள் என அந்த பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. பெங்களூருடன் ஓசூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான ரயில் வழித்தடத்தை ஏற்படுத்தும் போது அதிகமான மக்கள் பெங்களூருவில் வந்து தங்குவது குறையும்.
பொருளாதார வளர்ச்சி: அதாவது பெங்களூருவில் மக்கள் நெரிசல் அதிகரிப்பது குறையும் என சொல்லப்படுகிறது. அதேவேளையில் இந்த நகரத்துடனான போக்குவரத்து இணைப்பு எளிமையாக்கப்படும் போது பெங்களூரு -கிருஷ்ணகிரி- தர்மபுரி ஆகிய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மேம்படும் . பெங்களூர் மற்றும் தமிழ்நாடு நகரங்களுக்கு இடையே வணிகப் போக்குவரத்து என்பது அதிகமானதாக இருக்கிறது. பெங்களூர் வளர்ச்சிக்கு ஏற்ப ஓசூர் கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு வளர்ச்சிகள் நடைபெற தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு மக்களுக்கு வரப்பிரசாதம்: தமிழ்நாடு அரசினை பொருத்தவரை ஓசூரில் பல்வேறு உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகிறது. பெங்களூரு உடனான போக்குவரத்து இணைப்பு எளிமையாக்கப்பட்டால் இந்த மூன்று பகுதிகளிலும் அதன் மூலம் பலன் பெறும். பெங்களூரு -ஓசூர் -கிருஷ்ணகிரி- தர்மபுரி இடையில் இந்த வழித்தடம் தற்போது 138 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைய இருக்கிறது .இதன் மூலம் தர்மபுரியில் இருந்து பெங்களூருவை 95 நிமிடத்திலேயே அடைந்து விடலாம் என சொல்லப்படுகிறது. எனவே வேலை நிமித்தமாக இந்த நகரங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு இந்த ரயில் வழித்தடம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications