இல்லத்தரசிகளே! WFH தேடுறீங்களா? கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்! அரசின் இந்த ஒரு இணையதளம் போதுமே!

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு ஒர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக கல்லூரி செல்லும் மாணவர்கள், இல்லத்தரசிகள், பார்ட் டைம் ஜாப் தேடுபவர்கள் என அனைவருக்கும் "ஒர்க் ஃப்ரம் ஹோம்" ஒரு வரப் பிரசாதமாகவே அமைந்தது. அப்படி இருக்கையில் பெருந்தொற்று முடிந்த பிறகு பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும்படி அழைக்கத் தொடங்கினர். ஆனால் இன்னமும் சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து செய்யக்கூடிய வேலைகளை வழங்குகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

இல்லத்தரசிகளே! WFH தேடுறீங்களா? கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

நம்பகமான முறையில் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பும் நபர்களுக்காக இந்திய அரசு நேஷனல் கேரியர் சர்வீஸ் (National Career Service - NCS) என்னும் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த போர்ட்டலில் ஆயிரக்கணக்கான ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. NCS போர்ட்டலில் நாடு முழுவதும் உள்ள வேலை தேடுபவர்கள் நேரடியாக தாங்கள் விரும்பும் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

NCS என்றால் என்ன?: நேஷனல் கேரியர் சர்வீஸ் என்பது ஒரு வேலை வாய்ப்பு போர்ட்டல். இதில் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வழங்குபவர்கள் என அனைவரும் இருப்பார்கள். வேலை தேடுபவர்கள் தங்களுக்கென ஒரு அக்கவுண்டை உருவாக்கி உள்நுழைந்து பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய அரசால் தொடங்கப்பட்ட வேலைவாய்ப்பு தளங்களில் இதுவும் ஒன்று.

NCS போர்ட்டலில் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலைகள், பிரைவேட் செக்டார் வேலைகள், ஃபுல் டைம் வேலை வாய்ப்புகள், பார்ட் டைம் வேலை வாய்ப்புகள், ட்ரைனிங் ப்ரோக்ராம்கள் என அனைத்தும் வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் இதற்காக வெளியில் செல்ல தேவையில்லை. ஆன்லைன் மூலமாக எளிதில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அரசு உருவாக்கிய போர்ட்டல் என்பதால் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். தனியார் நிறுவன வேலைகள் முதல் அரசு வேலைகள் வரை பல வேலை வாய்ப்புகள் இதில் குவிந்து கிடக்கின்றன. இன்றெல்லாம் ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்ய வேண்டும் என்பதற்காகவே பலர் போலியான இணையதளங்களில் சிக்கி பணத்தை இழக்கின்றனர். அதனால் அரசின் நேரடி கண்காணிப்பில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலை வாய்ப்பும் அதன் உண்மை தன்மையை சரிபார்த்த பிறகே அப்லோட் செய்யப்படுகிறது.

வேலை தேடுபவர்களிடையே என்சிஎஸ் போர்ட்டல் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. தற்போது என்சிஎஸ் தளத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இல்லத்தரசிகளுக்கு ஏற்றவாறு நிறைய ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் இருந்து செய்யப்படும் வேலைகளில் டேட்டா என்ட்ரி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், டெக்னிக்கல் சப்போர்ட், டெலி காலிங், கஸ்டமர் சப்போர்ட் என பல்வேறு வேலைவாய்ப்புகள் அடங்கும்.

எப்படி விண்ணப்பிப்பது?: விண்ணப்பதாரர் சில எளிய விஷயங்களைப் பின்பற்றி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ நேஷனல் கேரியர் சர்வீஸ் போர்ட்டலுக்குச் செல்லுங்கள்.

ஸ்டெப் 2: நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், அதில் உங்களுக்கென ஒரு அக்கவுண்ட்டை உருவாக்குங்கள்.

ஸ்டெப் 3: உங்களுடைய கல்வித் தகுதி, திறன், அனுபவம் மற்றும் முழுமையான சுயவிவரம் ஆகிய அனைத்தையும் வழங்குங்கள்.

ஸ்டெப் 4: பின்னர் வீட்டிலிருந்து செய்யக்கூடிய வேலையை தேடுங்கள். ரிமோட் ஜாப், ஆன்லைன் வேலைகள் மற்றும் வொர்க் பிரம் ஹோம் என எப்படி வேண்டுமானாலும் தேடலாம். தகுந்த காலி பணியிடங்கள் இருந்தால் NCS இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்புகள் குறிப்பாக படித்துக் கொண்டே பணிபுரிய வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள், இல்லத்தரசிகள் புதிதாக பட்டம் வாங்கிய பட்டதாரிகள் மற்றும் சிறு நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால் பலர் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே சில போலியான இணையதளங்களில் சிக்கிக் கொண்டு ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்து, அதன் பிறகு தான் அந்த இணையதளம் போலி என்பதையே கண்டறிகின்றனர். எனவே வேலை தேடும் போது யாரேனும் பணம் கட்ட சொன்னால், அது போலியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அரசாங்க இணையதளங்கள் அல்லது நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டும் வேலை தேட பயன்படுத்துங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+