NDTV நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டியில் அதானி குழுமம் தொடர்ந்து வெற்றிப்பெற்று வரும் நிலையில் தற்போது NDTV நிறுவனர்களாகப் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் இந்நிறுவனத்தின் டைரெக்டர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகப் பங்குச்சந்தையில் அறிக்கை வெளியாகியுள்ளது.
பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் உடன் NDTV நிர்வாகத்தில் இருந்த 4 தனிப்பட்ட டைரெக்டர்-களும் டிசம்பர் 30 ஆம் தேதி உடன் ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் நிறுவனத்தின் உரிமை மட்டும் அல்லாமல் நிர்வாகமும் அதானி குழுமத்தின் கையில் தற்போது வந்துள்ளது.
பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் கையில் எவ்வளவு பங்குகள் உள்ளன..? கௌதம் அதானி தற்போது NDTV நிறுவனத்தில் எவ்வளவு பங்குகளை வைத்துள்ளார்..?
6 பேர் ராஜினாமா
வெள்ளிக்கிழமை NDTV நிர்வாகம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் முழு நேர இயக்குநர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களுடன் டேரியஸ் தாராபோர்வாலா இவர் non-executive, non-independent director பதவியிலிருந்தும், கௌசிக் தத்தா, இந்திராணி ராய் மற்றும் ஜான் மார்ட்டின் ஓ'லோன் ஆகியோர் non-executive, independent director பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளனர்.
புதிய நிர்வாகத் தலைவர்கள்
இதன் மூலம் வெள்ளிக்கிழமை அதானி குழுமம் நிர்வாகத்தில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் உரிமையைப் பெற்றுள்ளது. மேலும் NDTVயின் குழுமம் அமன் குமார் சிங்கை கூடுதல் இயக்குநராக நியமிக்க ஒப்புதல் அளிதுள்ளது, இவரை non-executive non-independent director பொறுப்பிலும், சுனில் குமார் கூடுதல் இயக்குநராகப் பதவியில் non-executive, independent director பொறுப்பில் நியமிக்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
27.26% பங்குகள் விற்பனை
NDTV நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர், NDTV நிறுவனத்தில் வைத்திருந்த 27.26% பங்குகளை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒரு பங்கை 342.65 ரூபாய் விலையில் விற்ற நிலையில் 602 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெறுவார்கள். அதானி எண்டர்பிரைசஸ் NDTV-க்கு அளித்த ஓப்பன் ஆஃபர் தொகையில் 17 சதவீத ப்ரீமியம் தொகைக்கு இந்த 27.26% பங்குகளை வாங்கியுள்ளது.
RRPR ஹோல்டிங்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங், NDTV-யில் 29.18 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருந்த நிலையில் தற்போது 27.26% பங்குகளை வாங்கியதன் மூலம் 56.45 சதவீத பங்குகளை மொத்தமாகப் பெற உள்ளது.
விஸ்வபிரதான் கமர்ஷியல்
இதோடு அதானி எண்டர்பிரைசஸில் மறைமுகமாகத் தனது துணை நிறுவனமான விஸ்வபிரதான் கமர்ஷியல் மூலம், NDTV-யில் கூடுதலாக 8.27 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இதன் மூலம் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் மற்றும் விஸ்வபிரதான் கமர்ஷியல் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் ஒட்டுமொத்தமாக 64.72% பங்குகளைப் பெற்று உள்ளது.
பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய்
இந்த விற்பனைக்குப் பின்பும் NDTV நிறுவனர்களாகப் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் தலா 5 சதவீத பங்குகளைத் தொடர்ந்து வைத்திருப்பார்கள், அதன் மதிப்பு அதே பங்கு விலையில் ₹110 கோடி.
பங்கு உரிமை
மேலும் NDTV நிறுவனர்களாகப் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் தலா 5 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், அவர்களின் பங்கு உரிமையை ப்ரோமோட்டர் என்ற பிரிவில் இருந்து Public பிரிவு பங்குதாரர்களுக்கு மாற்ற உள்ளது. இதன் மூலம் நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கம் இருக்காது. மேலும் இதற்கு நிர்வாகக் குழு முதல் செபி வரையில் பலர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications