காலியாகவுள்ள சுமார் 10 லட்சம் அரசு பணியிடங்கள்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த மார்ச் 2019 உடன் முடிவடைந்த நிதியாண்டில் மத்திய அரசில் கிட்டதட்ட 10 லட்சம் வேலைகள் காலியாக உள்ளன.

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே கடந்த 2018 - 19ம் ஆண்டிற்கான சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை மேற்கோள் காட்டி ET, ரயில்வே துறையில் மட்டும் 3 லட்சம் வேலைகள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏனெனில் 1.5 மில்லியன் பதவிகளுக்கு எதிராக 1.2 மில்லியன் பதவிகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது என சுட்டிக் காட்டியுள்ளது.

பாதுகாப்பு துறையில் காலியிடங்கள்

பாதுகாப்பு துறையில் காலியிடங்கள்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை அமர்த்திய துறைகளில், உள்துறை அமைச்சகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதோடு மத்திய அரசின் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் ஒன்று பாதுகாப்பு துறை. இந்த பாதுகாப்பு துறையிலேயே அதிக காலியிடங்கள் உள்ளதாகவும், இதில் 6,33,139 பணியிடங்களில் 60% பணியமர்த்தப்படவில்லை என்றும் தரவுகள் காட்டுக்கின்றன.

பணியாளர் செலவினம்

பணியாளர் செலவினம்

வருடாந்திர அறிக்கையின் படி, அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு மொத்த செலவினம் 2019ம் நிதியாண்டில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 7.4% வளர்ச்சியினைக் குறிக்கிறது.
ரயில்வே துறை, பாதுகாப்பு துறை, வீட்டு விவகாரங்கள், அஞ்சலகம் மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட 5 முக்கிய துறைகள், செலவினங்கள் அடிப்படையில் 80% பங்கு வகிக்கின்றன. இதே பணியாளர்கள் அடிப்படையில் 92% உள்ளது என தரவுகள் காட்டுகின்றன.

சம்பள செலவுகள் அதிகரிப்பு

சம்பள செலவுகள் அதிகரிப்பு

இதில் சிவில் வேலைகளுக்கான சம்பளம் மற்றும் அலவன்ஸ் செலவுகளில், சுமார் 36.7% ரயில்வே அமைச்சகம் பங்களிக்கிறது. இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் 24%மும், அஞ்சலக துறை 5.7% பங்கு வகிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அரசின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்களின் செலவு சீராக அதிகரித்துள்ளது. சம்பளம் மற்றும் அலவன்ஸ்களுக்காக செலவு 33% அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இதையும் கொஞ்சம் பாருங்க

இதையும் கொஞ்சம் பாருங்க

அரசின் மொத்த செலவினங்களில் 2015ம் நிதியாண்டில் 40% சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் பங்கு வகித்துள்ளது. இதே 2019ம் நிதியாண்டில் 71% ஆக உள்ளது. அதே சமயம் டிஏ விகிதம் குறைந்துள்ளது. இது கடந்த 2015ல் 41% ஆகவும், இதே 2019ல் 6% ஆகவும் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nearly 10- lakh govt jobs lying vacant; check details

Job updates.. Nearly 10- lakh govt jobs lying vacant; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X