நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலங்களும் முழுமையான கட்டுப்பாடுகளை நீக்கி வருகின்றன. இதற்கிடையில் பொருளாதாரம் ஏற்கனவே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நின்று போன திருமண விழா கொண்டாட்டங்கள், கோவில் திருவிழாக்கள் என அனைத்தும் இந்த ஆண்டு களை கட்டத் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூலை வரையிலான மூன்று மாத காலத்தில் மட்டும் நாட்டில் சுமார் 40 லட்சம் திருமணங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.5 லட்சம் கோடிக்கான வணிக வாய்ப்பு
இந்த திருமண விழாக்களின் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய வணிக வாய்ப்புகள் இருக்கலாம் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு செலவழிக்கப்படும் பணத்தில் பெரும்பகுதி திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு துறைகளிலும் இந்த செலவினங்கள் இருக்கலாம்.
டெல்லியில் மட்டும் 3 லட்சம் திருமணங்கள்
அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் பொது செயலாளர் பிரவீன் கண்டேல்வால் இது குறித்து கூறுகையில், இந்த திருமண பருவத்தில் 3 லட்சத்துக்க்கும் அதிகமாக திருமணங்கள் டெல்லியில் மட்டும் நடைபெறலாம். இதன் மூலம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்
இதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதே முக்கிய காரணம். இது திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க சமூகத்தினை ஊக்குவிக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல திருமணங்கள் நின்று போயின. மிக குறைவான நல்ல நாட்கள் மட்டுமே கிடைத்தன. இதனால் பல திருமண விழாக்களும் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில் வரவிருக்கும் திருமண பருவத்தில் 43 நாட்கள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடம்பர திருமணங்கள்
இது குறித்து CAIT-யின் தேசிய தலைவர் பிசி பார்தியா, சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு திருமணத்திற்கு சராசரியாக 2 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என்று மதிப்பிடப்படுகின்றது.
இது தவிர இன்னும் 10 லட்சம் திருமணங்கள் 10 லட்சம் செலவிலும் நடத்தப்படலாம், 50,000 திருமணங்கள் 50 லட்சம் செலவிலும் நடத்தப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே அளவிலான திருமணங்கள் 1 கோடி ரூபாயும் செலவிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக பார்தியா கூறியுள்ளார்.
என்னென்ன செலவுகள்?
இந்தியாவில் திருமணத்திற்காக செய்யப்படும் திருமண செலவினங்களில், 20 சதவீதம் மணமகன் மற்றும் மணமகள் தரபிற்காகவும், மீதமுள்ள 80% செலவினங்கள் மூன்றாம் தரபிற்காகவும் செலவிடப்படுகின்றது.
இதில் திருமணம் மண்டபங்கள், திருமணம் சார்ந்த சேவைகள் உள்ளிட்ட பலவும் மிகப்பெரிய செலவினங்களாக உள்ளன. இது தவிர வீடு பழுதுபார்த்தல், வண்ணம் பூசுதல், நகைகள், ஆடைகள், காலணிகள், வாழ்த்து அட்டைகள், உலர் பழங்கள், இனிப்புகள், உலர் பழங்கள், எலக்ரானிக்ஸ், மோட்டார் வாகனங்கள் மேலும் பல்வேறு பரிசு பொருட்கள் என பல செலவுகள் உள்ளது


Click it and Unblock the Notifications