5 வருசம் ஆச்சு.. ஆனா பணத்தை அசைக்க முடியல.. பணமதிப்பிழப்பு தோல்வியா..?!

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் பணியை முடித்துவிட்டு வீட்டில் உட்கார்ந்து இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு எவ்விதமான முன் அறிவிப்புமின்றிப் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தத் தடை விதித்தது செல்லாது என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்குப் பின்பு நாட்டு மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை மாற்றிக்கொள்ளப் பல நாட்கள் வங்கிகளில் காத்திருந்தனர். இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் பிரதமர் நரேந்திர மோடி வரலாறு காணாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்.

பணமதிப்பிழப்பு அறிவித்து 5 வருடம் முழுமையாக முடிந்த நிலையிலும் இந்தியாவில் பணத்தின் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

இந்தியாவில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 5 வருட காலம் அடுத்த சில நாட்களில் முடியும் வேளையிலும் மக்களிடம் பணமாக இருக்கும் பணத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

 பணம் தான் கிங்

பணம் தான் கிங்

இந்தியாவில் இன்னுமும் பேமெண்ட் துறையில் பணம் தான் பிரதான வழியாக உள்ளது. அக்டோபர் 8, 2021ன் படி இந்தியாவில் மொத்த பணப் பரிமாற்றத்தில் 28.30 லட்சம் கோடி ரூபாய் அதாவது 57.48 சதவீதம் பணமாகக் கொடுத்துத் தான் பொருட்கள் வாங்கவோ, விற்பனை செய்யப்படுகிறது.

28.30 லட்சம் கோடி ரூபாய் என்பது வரலாற்று உச்ச அளவீடாகும்.

 211 சதவீதம் அதிகம்

211 சதவீதம் அதிகம்

நவம்பர் 4, 2016ல் இதன் அளவு மொத்த 17.97 லட்சம் ரூபாயில் 10.33 லட்சம் கோடி ரூபாய்ப் பணமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 211 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல் 2020 தீபாவளி பண்டிகையின் போது அதாவது அக்டோபர் 23, 2020 ஒரு நாளில் மட்டும் 15,582 கோடி ரூபாய்ப் பணமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 கொரோனாவும்.. லாக்டவுனும்..

கொரோனாவும்.. லாக்டவுனும்..

கடந்த 5 வருடத்தில் 2020ல் தான் டிஜிட்டல் பணத்தின் அளவு பெரிய அளவில் குறைந்து மக்களிடம் பணமாக அதிகளவில் சென்றது. இதற்கு முதலும் முக்கியக் காரணம் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் தான்.

 மக்களின் நம்பிக்கை

மக்களின் நம்பிக்கை

இதேவேளையில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் இந்தியா முழுவதும் விரிவாக்கம் அடைந்து அனைத்து தரப்பினரும் அதிகளவில் டிஜிட்டல் முறையில் பணத்தைச் செலுத்தி வருகின்றனர். ஆனாலும் பணத்தின் மீது இருக்கும் நம்பிக்கை மக்களுக்கு இன்னமும் டிஜிட்டல் பேமெண்ட் மீது வரவில்லை.

 பணமதிப்பிழப்பு தோல்வியா..?

பணமதிப்பிழப்பு தோல்வியா..?

இதேவேளையில் வருமான வரித்துறை ஒவ்வொரு முறையும் ரெய்டு நடத்தும் போது பல கோடி ரூபாய் பணம் சிக்குகிறது. சாமானிய மக்களை விடவும் பெரும் பணக்காரர்களிடம் தான் அதிகளவிலான தொகை பணமாக உள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. இதனால் கருப்புப் பணம் ஒழிப்பதாகவும், டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதாகவும் அறிவித்து மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியா..? மக்களாகிய உங்களின் பதில் என்ன..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+