இனி தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஈ-ஆதார் கட்டாயம்!! முதல் 10 நிமிடங்கள் ஏஜெண்டுகளுக்கு கிடைக்காது!!

இந்தியாவில் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்ல ரயில்களை பயன்படுத்துபவர்களே அதிகம். இதில் திடீரென வெளியூர்களுக்கு பயணம் செய்யும் சூழலுக்கு ஆளாகுபவர்களுக்கு உதவுவதற்காக தான் தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு கொண்டுவரப்பட்டது.

தட்கல் டிக்கெட் ஏன் கிடைப்பதில்லை?: ஆனால் இத்தகைய தட்கல் டிக்கெட்டுகளை அத்தனை எளிதாக நம்மால் முன்பதிவு செய்துவிட முடியாது. தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவில் ஏஜென்ட்களின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது.ஆன்லைனில் முன்பதிவு செய்ய காத்திருந்தாலும் பெரும்பாலான சாமானிய மக்களால் தக்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிவதில்லை. ஒரு நொடியில் அனைத்து டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.

இனி தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஈ-ஆதார் கட்டாயம்!! முதல் 10 நிமிடங்கள் ஏஜெண்டுகளுக்கு கிடைக்காது!!

தட்கல் டிக்கெட்டுக்கு ஈ ஆதார் கட்டாயம்: இந்த சூழலில் தான் தட்கல் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஈ ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது. அதாவது தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது ஆதார் எண் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதனை அடுத்து ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்ப்பு நடத்தப்பட்ட பின்னர் தான் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும் என்ற வகையில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது.

புகார்களை அடுத்து அரசு நடவடிக்கை: எனவே இனிவரும் காலங்களில் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது பொதுமக்களுக்கு எளிதானதாக இருக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் கருதுகிறது. காலை 10 மணிக்கு தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு காத்திருந்தாலும் 90% பேருக்கு டிக்கெட் கிடைப்பது கிடையாது இது தொடர்பாக தொடர்ந்து மத்திய ரயில்வே துறை அமைச்சகத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்ட வண்ணம் இருந்தன.

2.5 கோடி போலி கணக்குகள் நீக்கம்: அண்மையில் 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐஆர்சிடிசி நீக்கியது. இந்த சூழலில் தட்கல் டிக்கெட்களை மக்கள் எளிதாக பெரும் வகையில் விரைவில் ஆதார் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஈ ஆதார் கட்டாயம் செய்யப்படும் இது உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்டு டிக்கெட்டுகளை பெற உதவும் என அஸ்வினி வைஷ்ணவி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருக்கிறார்.

ஜூன் மாத இறுதிக்குள் நடைமுறை?: ஜூன் மாத இறுதிக்குள் இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் பொதுமக்கள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு தங்களுடைய ஈ ஆதாரை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஈ ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு அது சரிபார்க்கப்பட்ட பின்னர் தான் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல் 10 நிமிடங்கள் ஏஜெண்டுகளுக்கு கிடைக்காது: மேலும் தங்களுடைய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வைத்திருக்கக்கூடிய பயணர்களுக்கு தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கும் போது முதல் 10 நிமிடங்கள் அவர்களுக்கான டிக்கெட் முன்பதிவுக்கான நேரமாக வழங்கப்படும். இந்த சமயத்தில் எந்த ஒரு ஏஜெண்டுகளாலும் தட்கல் டிக்கெடுகளை முன் பதிவு செய்ய முடியாது. எனவே ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைத்து பயன்படுத்தும் பயனாளர்கள் இனி எளிதாக தக்கல் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ள முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+