நீட் மட்டுமில்ல இனி எந்த தேர்வில் முறைகேடு செய்தாலும் கடும் தண்டனை:புதிய சட்டம் கொண்டு வரும் அரசு!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு கட்டாயம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தேர்வில் பல முறைகேடுகள் நடக்கின்றன. இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததால் இரண்டாவது முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேடுகளை தடுக்க தவறியது உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் பெரிய அளவிலான போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து சனிக்கிழமை அன்று தரேம்ந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். பிரகலாத் ஜோஷி கல்வி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீட் மட்டுமில்ல இனி எந்த தேர்வில் முறைகேடு செய்தாலும் கடும் தண்டனை:புதிய சட்டம் கொண்டு வரும் அரசு!!

இதற்கிடையே அரசுத் தேர்வுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய சட்ட திருத்த மசோதா (அரசுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா-2026) மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

முன்னதாக போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார். அந்த உறுதிமொழியின் அடிப்படையில், இந்த மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

Also Read

இந்த மசோதா, தேர்வு முறைகேடுகளை கட்டுப்படுத்த இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் தண்டனைகளை வரையறுத்துள்ளது. வினாத்தாள் கசிவு அல்லது இதர தேர்வு முறைகேடுகளில் நேரடியாக ஈடுபடும் தனிநபர்களுக்கு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், 50 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

முறைகேடுகளில் ஈடுபடும் கும்பல்கள் திட்டமிட்டு செயல்படும் குற்றங்களுக்கு, கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்ட திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம், வழக்கு விசாரணைகளை விரைந்து முடிப்பதற்காக பிரத்யேகமாக விரைவு நீதிமன்றங்களை அமைப்பது. இதன் மூலம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

Recommended For You

இந்த மசோதாவை அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் அறிமுகம் செய்வார். இதனை அடுத்து மசோதாவின் அம்சங்கள் விவரிக்கப்பட்டு விவாதம் நடைபெறும். பின்னர் இது மாநிலங்களவைக்கு சென்று அங்கும் நிறைவேறினால் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். ஏற்கனவே ஒரு வார காலமாக நாடாளுமன்றம் முடங்கி போயுள்ள நிலையில் இன்று இந்த மசோதா தாக்கலை தொடர்ந்து சீராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தேர்வு முறைகளில் சீர்த்திருத்தம் கொண்டு வர இன்போசிஸ் நந்தன் நீலகேனி தலைமையில் அரசு குழு ஒன்றை அமைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+