இந்தியாவுக்கு வருகிறது நியோ வங்கி.. 100% டிஜிட்டல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கி சேவைகளில் தற்போது பல டிஜிட்டல்மயமாகியுள்ளது எல்லோருக்கும் தெரியும், இந்த மாற்றம் பல வகையில் நமக்கும் அளிக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இதுவே மொத்த வங்கியும் டிஜிட்டலாக இருந்தால் எப்படி இருக்கும்..? கொஞ்சம் பயமாகத் தான் உள்ளது என நினைக்கும் அனைவருக்கும் இந்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கலாம்.

ஆம் வங்கி கிளைகள் கூட இல்லாமல் மொத்தமும் டிஜிட்டல் முறையில் இயங்கும் வங்கிகள் தான் நியோ வங்கி. இத்தகைய வங்கி தற்போது இந்தியாவில் உருவாக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

கூகிள் பே

கூகிள் பே

இந்திய பேமெண்ட் சந்தையில் மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்களையும், மக்களின் நம்பிக்கையும் பெற்று ஆகச்சிறந்த பேமெண்ட் தளமாக இருக்கும் டெஸ் எனப்படும் கூகிள் பே உருவாக்கிய முன்னாள் கூகிள் நிறுவனத்தின் தலைவர் சுஜித் நாராயணன் சில மாதங்களுக்கு முன் நிறுவனத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் நியோ வங்கி உருவாக்குவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளார்.

 

 

13.2 மில்லியன் டாலர்

13.2 மில்லியன் டாலர்

இதற்காகச் சுஜித் நாராயணன் epiFi என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். வெறும் 8 மாதம் மட்டுமே ஆன இந்நிறுவனத்தில் சுமார் 13.2 மில்லியன் டாலர் தொகை முதலீடாகப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் முதலீடு செய்ததும் பெரிய முதலீடு தலைகள் தான் சிகோயா கேபிடல், ரிப்பிட் கேபிடல், ஹில்ஹவுஸ் கேபிடல் குரூப் ஆகிய நிறுவனங்கள் epiFi நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

பெரிய தலைகள்
 

பெரிய தலைகள்


இந்த முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தில் பிரேசில் நாட்டில் நியோ பேங்கிக் துறையில் சிறந்து விளங்கும் Nubank நிறுவனத்தின் தலைவர் டேவிட் வீலிஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி பேமெண்ட் ஸ்டார்ட்அப் நிறுவனமான CRED நிறுவனத்தின் தலைவர் குனால் ஷா ஆகியோர் தற்போது சுஜித் நாராயணன்-னின் epiFi நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.

 

 

வங்கித்துறையில் ஸ்டார்ட்அப்

வங்கித்துறையில் ஸ்டார்ட்அப்

இந்தியாவில் இதுவரை பேமெண்ட் துறையில் தான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தது, ஆனால் தற்போது முதல் முறையாக வங்கித்துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாகியுள்ளது.

epiFi நிறுவனம் QR பேமெண்ட் மட்டும் அல்லாமல் மொத்த வங்கி சேவைகளையும் மொபைல் வாயிலாக டிஜிட்டல் முறையில் கொடுக்க முயற்சி செய்கிறது.

 

இளைஞர்கள்

இளைஞர்கள்

epiFi நிறுவனத்தின் சேவை அனைத்தும் இளைஞர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாகவும், வங்கித்துறையில் டிஜிட்டல் சேவையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த நியோ வங்கி இருக்கும் எனத் தெரிகிறது.

தற்போது கிடைத்துள்ள 13.2 மில்லியன் டாலர் முதலீடு அனைத்தும் epiFi நிறுவனத்தின் டெக்னாலஜி அணியையும், மார்கெட்டிங் மற்றும் விற்பனை அணிகளை உருவாக்குவதில் செலவு செய்யப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: google pay
English summary

Neo-banking startup in India: epiFi raises $13 million in just 8 months

From proving a mobile payments app to India with Tez, Sujith Narayanan is transitioning to a different arena of finance with his new company epiFi. Narayanan's eight-month-old startup landed $13.2 million in a seed round from a few well-known names in venture capital, namely Sequoia Capital, Ribbit Capital, and Hillhouse Capital Group.
Story first published: Tuesday, January 14, 2020, 13:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X