நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட கடும் வெள்ள பாதிப்பில், மீட்பு பணிகளை நாளுக்கு நாள் மோசமாக்கியும், கடுமையாக்கியும் வருகிறது. இதில் முக்கியமாக ராசுவா என்னும் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி ஆலையின் சுரங்கப்பாதையில் சேறு நிரம்பியுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் இரவு பகலாக நேபாள ராணுவத்தினரின் உதவியுடன் நடந்து வருகிறது.
மேலும் இந்த வெள்ளத்தில் இதுவரை 626 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000மாக அதிகரித்துள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நேபாள வெளியுறவு அமைச்சர் சிசிர் கனல், நாட்டை மீண்டும் கட்டமைக்க சர்வதேச நாடுகளின் உதவி தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார். மறுசீரமைப்புப் பணிகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளையில் நேபாள நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளார்.
மோசமான வெள்ள பாதிப்பில் இருந்து நேபாளம் முழுமையாக மீண்டு வர குறைந்தது 4-5 பில்லியன் டாலர் தேவைப்படும் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே சனிக்கிழமை ராய்ட்டர்ஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த 5 பில்லியன் டாலர் தொகை என்பது அந்நாட்டின் பொருளாதார மதிப்பில் 10 சதவீதமாகும்.
இமயமலையில் லாங்டாங் லிருங் மலையில் இருந்த 2000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த கோர விபத்து நேபாள நட்டின் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக ரசுவா, நுவாகோட், தடிங் உருக்குலைந்துள்ளன. தற்போது நேபாள அரசு பாதிப்பின் அளவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் வேளையில் முதல்கட்ட கணிப்பாக 5 பில்லியன் டாலர் தேவை என கூறியுள்ளனர்.
இதைவிட முக்கியமாக 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 9000 பேர் மரணம் அடைந்தனர், 5 லட்சம் பேர் தங்களுடைய வீடுகளை இழந்தனர். அப்போது அந்நாட்டின் பொருளாதாரத்தில் 3ல் ஒரு பகுதி பாதிப்பு ஏற்பட்டதாகவும் கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலர் செலவில் நேபாளம் மீண்டு வந்தது.
அந்நாட்டின் வரலாற்றில் மிகவும் மோசமான பாதிப்பாக இன்று வரையில் இந்த நிலநடுக்கம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தற்போது 5 பில்லியன் டாலர் மற்றும் அந்நாட்டின் பொருளாதாரத்தில் 10 சதவீதம் மட்டுமே பாதிப்பாக கணக்கிட்டு உள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் நேபாள மக்களின் பணம், சுற்றுலா போன்றவற்றை அதிகம் நம்பியிருக்கும் நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ள பாதிப்பு அந்நாட்டின் ஹைட்ரோபவர், பல்வேறு மின்சார திட்டங்களை பாதித்து சுமார் 12 சதவீத மின்சார உற்பத்தி பாதிப்பை உருவாக்கியுள்ளது.
இதுபோன்ற இயற்கை பேரிடரில் உயிர் பாதிப்பை ஒருப்பக்கம் ஒரு நாட்டை பாதிக்கும், அதேவேளையில் பொருளாதாரமும் பாதிப்பும் மிக கொடுரமானதாக உள்ளது. அதிலும் முக்கியமாக நேபாளம் போன்ற சிறிய நாடுகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை.


Click it and Unblock the Notifications

