நேபாளம்: முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடு நேபாளம். தனக்கு தேவையான எண்ணெய், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து கொள்கிறது. குறிப்பாக நேபாள அரசு தங்கள் நாட்டுக்கு தேவையான எரிபொருளுக்கு பெரும்பாலும் வெளிநாடுகளை தான் சார்ந்து இருக்கிறது.
இதற்காக பெருமளவி அந்நிய செலாவணியை வாங்க வேண்டி இருக்கிறது. இது அந்நாட்டு அரசுக்கு பெரும் நிதி சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆனால் நேபாள அரசு இதற்கு புத்திசாலித்தனமான தீர்வினை கண்டுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எரிபொருளை பயன்படுத்தக்கூடிய வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என நேபாள அரசு ஊக்குவித்து வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் நேபாளத்தில் புதிதாக விற்பனையாக கூடிய கார்களில் 30% மின்சாரத்தால் இயங்கக்கூடிய கார்களாக இருக்க வேண்டும் என்றும், 2030ஆம் ஆண்டுக்குள் இதனை 90% என உயர்த்தவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 2030க்குள் விற்பனையாகும் வாகனங்களில் 30% மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியாவை விட மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் நேபாள அரசு மூன்று மடங்கு மிகத் தீவிரமாக செயல்படுவது இதன் மூலம் தெரிய வருகிறது. நேபாளம் ஹைட்ரோபோவர் திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரித்து தன்னிறைவு பெறுகிறது.
இந்தியாவின் உதவியோடு அந்த நாடு பல்வேறு ஹைட்ரோ பவர் திட்டங்களை வெற்றிகரமாக கட்டி முடித்து செயல்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 94 % நேபாள மக்கள் தற்போது போதுமான அளவு மின்சார விநியோகத்தை பெறுகின்றனர். அடுத்த ஆண்டில் நேபாள அரசு மிகப் பெரிய ஒரு ஹைட்ரோ பவர் திட்டத்தை கட்டி முடிக்க உள்ளது.
அடுத்த ஆண்டிலிருந்து மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு மட்டுமில்லாமல் கூடுதலாகவும் மின்சாரம் கொண்டிருக்கும் நாடாக நேபாளம் இருக்கும். எனவேதான் நேபாள அரசு மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வருகிறது. நேபாள அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய மின்சார வாகனங்களுக்கான வரிகளையும் கணிசமான அளவு குறைத்து இருக்கிறது. பெட்ரோல் கார்களுக்கு 276 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் நேபாள அரசு மின்சார வாகனங்களுக்கு 90 சதவீதம் என குறைத்திருக்கிறது.
எனவே நேபாளத்தில் பாரம்பரிய பெட்ரோல் டீசல் கார்களை விட மின்சார வாகனங்களின் விலை என்பது குறைவானதாக இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நேபாளத்தில் மின்சார வாகனங்களின் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என தி ஹிமாலயன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு மின்சார வாகனங்களுக்கு மாறியதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் மட்டும் நேபாள நாட்டு அரசு எரிபொருள் இறக்குமதியை குறைந்து 22 மில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்தியுள்ளது. அதே வேளையில் நேபாளத்தில் விற்பனையாக கூட பெரும்பாலான மின்சார வாகனங்கள் சீனாவின் பிஒய்டி நிறுவனத்திற்கு சொந்தமானதாகவே இருக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications