நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டு அரசின் சமூக ஊடக தளங்கள் தடை செய்யப்பட்டதன் காரணமாகவும், ஊழல் பிரச்சினைகளுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலையில் இறங்கி பெரும் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து மக்கள் போராட்டங்களுக்கும், வன்முறைக்கும் பொறுப்பேற்று, நேபாள நாட்டின் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த போராட்டங்கள் ஜென் இசட் எனப்படும் இளம் தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட்டவை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. போராட்டாக்காரர்கள் மற்றும் போலீசாருடனான மோதல்களில் 19 பேர் உயிரிழந்தனர், மேலும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டின் அரசியல் அமைப்பை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது.

இந்த போராட்டம் 26 சமுக வலைத்தளங்களை தடை செய்ததிற்கு எதிராக துவங்கினாலும் போராட்டக்காரர்கள் ஊழலை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தின் போக்கை மாற்றினர்.
மக்களின் போராட்டம் எல்லையை கடந்த நிலையில் காத்மாண்டு மாவட்ட நிர்வாக அலுவலகம் மதியம் 12:30 முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. பனேஷ்வர், சிங்கதுர்பார், நாராயண்ஹிதி போன்ற முக்கிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி அவசர அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். போராட்டங்களின் வன்முறைக்கு பொறுப்பேற்று, நேபாள நாட்டின் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமரின் இல்லமான பலுவதாரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
மக்களின் இந்த போராட்டத்திற்கு அவர் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக தற்போது நேபாள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
நேபாள அரசு 26 சமுக வலைத்தளங்களை தடை செய்தபோது, சமூக ஊடகங்களில் போலி அடையாளங்கள் மூலம் குற்றங்கள் அதிகரித்ததாக விளக்கமளித்தது. இருப்பினும், மக்கள் இந்த தடையை கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறினர். நேபாள அரசு இராணுவத்தை அழைத்து போராட்டத்தை கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் கடந்த 20 வருடத்தில் நடந்த மிகப்பெரிய மக்கள் போராட்டாமாக இது விளங்குகிறது நேபாள தலைநகர் காத்மாண்டுவில் மட்டும் சுமார் 17 பேர் இறந்துள்ளனர். சுன்சாரி மாவட்டத்தின் இடாஹரி நகரில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

எதற்காக இந்த தடை..?!
நேபாள அரசு செப்டம்பர் 4 அன்று 26 பிரபல சமூக ஊடக தளங்களைத் தடை செய்தது. இந்த தளங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்யவில்லை என்பதே காரணம். ஆகஸ்ட் 28 முதல் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது, ஆனால் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஆல்பபெட் நிறுவனத்தின் யூடியூப், எக்ஸ் (முன்பு ட்விட்டர்), ரெடிட், லிங்க்டின் போன்றவை பதிவு செய்யவில்லை.
போலி அடையாளங்களைப் பயன்படுத்தி வெறுப்புப் பேச்சு, போலி செய்திகள், மோசடி போன்ற குற்றங்களைச் செய்வதாக அரசு குற்றம்சாட்டியது. இந்த தடை சமூக இணைப்பை பாதித்தது, குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் நேபாள மக்களுக்கு இதன் மூலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications