என்னதான் டெக்னாலஜி வளர்ந்துவிட்டாலும் இன்னும் அது சிலருக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. அப்படி நேபாளத்தில் ஒரு கிராமத்தில் அடிப்படை சுகாதார , மருத்துவ வசதிகள், மின்சாரம் அங்குள்ள மக்களுக்கு ஒரு ஆடம்பரமான விஷயமாகவே இருக்கிறது.
நேபாள அரசு எந்தவித முயற்சியும் எடுக்காததாலும் கடுமையான மலைப் பிரதேசம் என்பதாலும் அந்நாட்டில் உள்ள பல கிராமங்களில் உள்ள ஹெல்த் சென்டர்களில் போதிய வசதிகள் இல்லை. அண்மையில் பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் சேனலின் தொண்டு நிறுவனமான பீஸ்ட் பிலான்தெராபி ஒரு கிராமத்தில் இருந்த ஹெல்த் சென்டரை சீரமைத்து அதற்கு மின் இணைப்பையும் அளித்துள்ளது.

இதுபற்றி மிஸ்டர் பீஸ்ட் எனப்படும் ஜிம்மி டோனால்டுசன் ஒரு விடியோவில் விளக்குகையில், மின் வசதி இல்லாமலும் அவசர சிகிச்சைகளைச் செய்வதற்கு டாக்டர்களும் இல்லாமல் பல சிகிச்சைகள் எமர்ஜென்ஸி விளக்கு ஒளியில் செய்யப்படுகிறது. நல்ல வசதி உள்ள ஹெல்த் சென்டருக்குச் செல்லவேண்டும என்றால் அந்த கிராம மக்கள் 7 மணிநேரம் பயணம் செய்து போக வேண்டும்.
பீஸ்ட் பிலான்தெராபி, கிவ் பவர் மற்றும் கிரீன் புரோகிராம் ஆகிய இரு நிறுவனங்களுடன் சேர்ந்து அந்த மருத்துவமனையில் சோலார் மின் பேனல்களைப் பொருத்தியது. அந்தப் பேனல்கள் மூலம் சிசுக்களை கதகதப்பாக வைத்திருக்கும் மெஷின்களை இயக்கி அவற்றின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
இந்த சிசுக்களை கதகதப்பாக வைத்திருக்கும் மெஷின்கள் நியானோ நானி என்று அழைக்கப்படுகின்றன. அதன் அர்த்தம் கதகதப்பான குழந்தை என்று அர்த்தம்.
அந்த மெஷின்கள் கிவ் பவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு அப்பகுதி இன்ஜினியரான சஞ்சய் உருவாக்கியுள்ளார். சஞ்சயிடமிருந்து மேலும் 10 நியோ நானி மெஷின்களை வாங்கி பல்வேறு ஹெல்த் சென்டர்களில் பீஸ்ட் பிலான்தெராபி நிறுவியுள்ளது.
இது பற்றி பீஸ்ட் பிலான்தெராபி பகிர்ந்துள்ள 10 நிமிட விடியோவில், நாங்கள் ஒரு மலையை மின்சாரமயமாக்கியுள்ளோம் என்று தலைப்பிட்டு கஷ்டப்பட்டு அந்த மருத்துவமனையை சீரமைத்தது பற்றி விளக்கியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி அப்லோடு செய்யப்பட்ட இந்த விடியோவுக்கு இதுவரை 25 லட்சம் லைக்குகள் குவிந்து விட்டன.
இதுபற்றி ஒரு யூடியூப் பயனர், இந்த சமூகம் எப்படி போராடி வருகிறது என்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்க ஆளாகின்றனர். ஆனாலும் எல்லாரும் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றனர். பீஸ்ட் பிலான்தெராபியின் உதவியுடன் அவர்கள் தங்களது எதிர்காலத்தை சமாளிப்பார்கள். நன்றி ஜிம்மி, டேரன், பீஸ்ட் பிலான்தெரபி குழுவினருக்கும் மற்ற பிற தொண்டு நிறுவனங்களுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
நியோ நானி மெஷினின் முக்கியத்துவம் பற்றி ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர் கூறுகையில், இந்த கதகதப்பான மெஷின்கள் ஒரு சிசுவின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கை ஆற்றுகிறது.
சிசுக்களால் தாங்களாகவே உடல் உஷ்ணத்தை அதிகரிக்க முடியாது. ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணராக இந்த மெஷின்களைப் பயனஅபடுத்தும்போது அவை இந்த சிசுக்களுக்கு எவ்வளவு அத்தியாவசியம் என்பதை நினைக்கும் போது புல்லரிக்கிறது.
இது உண்மையிலேயே சிறந்த பரிசாகும். ஜிம்மிக்கும் அவரது குழுவினருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் இந்த விடியோ இன்னும் அதிக நேரம் ஓட வேணடும் என விரும்புகிறேன். இந்த விடியோ ஒரு டாக்குமென்ட்டாக இன்னும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பதிவிட்டுள்ளார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications