டெல்லி: உலகின் மிகப் பெரிய நுகர்பொருள் மற்றும் குழந்தைகளுக்கான உணவு மற்றும் திண்பண்ட தயாரிப்பாளரான நெஸ்லே இந்தியா உள்ளிட்ட ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவு பொருள்களில், சர்க்கரையைச் சேர்ப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் புலனாய்வு நிறுவனமான, பப்ளிக் ஐ யின் புலனாய்வு அறிக்கையின்படி, நெஸ்லே நிறுவனம், இந்தியா உட்பட பல நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவு பொருட்களான செர்லாக்கில், சர்க்கரையை, சுக்ரோஸ் மற்றும் தேன் வடிவில் சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு குழந்தைகளின் உணவுகளில் சர்க்கரையை சேர்ப்பது, சர்வதேச வழிகாட்டுதல்களை மீறுவதாகும். ஆனால் பப்ளிக் ஐ நடத்திய விசாரணையில், இந்த விதி மீறல்கள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.
சுவிஸ் நிறுவனம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் விற்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் குழந்தை உணவுப் பொருட்களின் மாதிரிகளை பெல்ஜிய ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பிய பின்னர், இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நெஸ்லேவின் 2 குழந்தை உணவுப் பொருட்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் யுனைடெட் கிங்டம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பிற வளர்ந்த நாடுகளில், அதே தயாரிப்புகளில் சர்க்கரை இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், மொத்தமாக 15 செர்லாக் தயாரிப்புகளிலும் சராசரியாக 2.7 கிராம் சர்க்கரை உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே தயாரிப்பு ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் சர்க்கரை சேர்க்கப்படாமல் விற்கப்படுகிறது. எத்தியோப்பியா மற்றும் தாய்லாந்தில், இதே தயாரிப்பில் சுமார் 6 கிராம் சர்க்கரை இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில், இந்த வகை குழந்தை உணவு பொருட்களின் விற்பனை $250 மில்லியனைத் தாண்டி உள்ளது. அனைத்து செர்லாக் குழந்தை உணவு பொருட்களிலும் சராசரியாக ஒரு கேனில் 3 கிராம் சர்க்கரை இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் முக்கிய சந்தையான தென்னாப்பிரிக்காவிலும் இதே நிலைமை நிலவுகிறது, அங்கு அனைத்து குழந்தை உணவுகளிலும் 4 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரை உள்ளது. பிரேசில் இப்போது நெஸ்லேவின் உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக இருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் சுமார் $150 மில்லியனைத் தாண்டி பிரேசிலில் விற்பனையாகியுள்ளது. முசிலான் என்று அழைக்கப்படும் செர்லாக் பேபி சிரில்ஸில் சராசரியாக 3 கிராம் சர்க்கரை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
பாக்கெட்களின் லேபிள்களில் சர்க்கரையின் அளவை நெஸ்லே குறிப்பிடுகிறதா?: "நெஸ்லே அதன் தயாரிப்புகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை படங்களைப் பயன்படுத்தி சிறப்பித்துக் காட்டுகிறது, ஆனால் சர்க்கரை என்று
வரும்போது வெளிப்படைத்தன்மை இல்லை" என்று புலனாய்வு நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுப் பொருட்களில், சர்க்கரை ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய நிபுணர்களின் கருத்து: குழந்தை உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்ப்பது ஆபத்தான மற்றும் தேவையற்ற நடைமுறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் இனிப்புச் சுவைகளுக்குப் பழக்கப்பட்டு, அதிக சர்க்கரைக் கொண்ட உணவுகளைத் தேடத் தொடங்குவதால், அவர்கள் உடல் பருமன் மற்றும் பெரியவர்களைப் போல நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள். என்கிறார் தொற்றுநோயியல் நிபுணரும், ஊட்டச்சத்து துறையின் பேராசிரியருமான ரோட்ரிகோ வியன்னா.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications