நெஸ்லே நிறுவனம் கேப்பிடல் ஃபுட்ஸ் நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உலகின் மிகப்பெரிய உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நெஸ்லே, 'சிங்'ஸ் சீக்ரெட்' பிராண்ட்-ன் (Ching's Secret)உரிமையாளரான கேபிடல் ஃபுட்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு போட்டியிடுவதும் மட்டும் அல்லாமல் போட்டியில் முன்னோடியாக உள்ளாது.
இதன் மூலம் நெஸ்லே, சிங்'ஸ் சீக்ரெட் நிறுனத்தை கைப்பற்றுவதன் மூலம் நூடில்ஸ், சாஸ், சூப் ஆகிய துறையில் தனது வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளது. நெஸ்லே மேகி-க்கு போட்டியாக சிங்'ஸ் சீக்ரெட் வளர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
நெஸ்லே நிறுவனம்
நெஸ்லே நிறுவனத்தின் வருவாயைக் கூட்டவும், போட்டி நிறைந்த வர்த்தக சந்தையில் இந்தியா உட்பட பல நாடுகளின் சந்தைகளில் தனது நிறுவனத்தை விரிவாக்கும் திட்டத்திற்காக இந்த ஏலத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேப்பிடல் ஃபுட்ஸ்!
கேப்பிடல் ஃபுட்ஸ் இந்தியாவின் மும்பையின் அதன் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒப்பந்த பரிவர்த்தனையில் கேப்பிடல் ஃபுட்ஸ் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்பிடப்படும் எனவும் ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கேப்பிடல் ஃபுட்ஸ் தயாரிப்புகள்!
கேபிடல் ஃபுட்ஸ் காரமான நூடுல்ஸ் மற்றும் ஃபியூஷன் சட்னிகளின் 'சிங்'ஸ் சீக்ரெட்' எனும் பிராண்டை உருவாக்கியுள்ளது. மேலும் ஸ்மித் & ஜோன்ஸ் சமையல் பேஸ்ட்கள் மற்றும் மசாலா கலவைகளையும் விற்பனை செய்து வருகிறது.
கேபிடல் ஃபுட்ஸ் முதலீட்டாளர்களில் ஜெனரல் அட்லாண்டிக் அடங்கும், இது 2018 இல் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
நெஸ்லே ஜெயிக்குமா!
கேப்பிடல் ஃபுட்ஸ் நிறுவனத்தை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன, இதில் நெஸ்லேவும் ஒன்று. ஆனால் இந்த போட்டியில் நெஸ்லேவிற்கு சாதகமாக அமையும் என்பதில் உறுதியாக கூற முடியாது எனவும் அறிக்கை கூறுகின்றது. இந்திய FMCG மற்றும் உணவு பொருட்கள் துறையில் போட்டி அதிகமாக இருக்கும் காரணத்தால் நெஸ்லே போராடி தான் கேப்பிடல் ஃபுட்ஸ்-ஐ கைப்பற்ற முடியும்.
நெஸ்லே இந்தியா!
நெஸ்லே நிறுவனம் 1961 இல் இந்தியாவில் தனது முதல் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியது, தற்போது நூடில்ஸ், yogurt முதல் தானியங்கள் வரை அனைத்தையும் விற்பனை செய்து வருகிறது.
நெஸ்லே இந்தியா சந்தை மதிப்பு!
நெஸ்லே இந்தியா லிமிடெட் பங்குகள் கடந்த 12 மாதங்களில் 10% அதிகரித்து, அதன் சந்தை மதிப்பு சுமார் 22.3 பில்லியன் டாலராக உள்ளது. வெள்ளிக்கிழமை காலை வர்த்தக நிலவரப்படி நெஸ்லே இந்தியாவின் பங்குகள் 2.35% உயர்ந்து ரூ.19,500 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications