புகழ்பெற்ற நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஜென் ஸீ மற்றும் மில்லினியல் வாடிக்கையாளர்களால் தங்களுடைய கோல்டு காபி பொருட்களின் விற்பனை அதிகரித்து இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
1981 லிருந்து 1996 ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களை மில்லினியல்கள் என்றும், 1997 இல் இருந்து 2012 ஆம் ஆண்டு வரை பிறந்த தலைமுறையினரை ஜென் ஸீ என்றும் அழைக்கிறோம். இவர்கள் அதிகம் கோல்ட் காபி பொருட்களை வாங்குவதால் தங்களுடைய நிறுவனம் இந்த பிரிவில் அதிக லாபம் கண்டிருப்பதாக நெஸ்ட்லே இந்தியா தெரிவித்துள்ளது . அதாவது கோல்ட் காபி பிரிவில் தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை இரண்டு இலக்கமாக உயர்ந்து இருக்கிறது என 2025 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்ட நெஸ்ட்லே இந்தியா குறிப்பிட்டுள்ளது.

தங்களுடைய நிறுவனம் விற்பனை செய்யக்கூடிய பொருட்களில் பவுடர் மற்றும் லிக்விட் பீவரேஜ்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டு நல்ல வருமானத்தை ஈட்டி தந்து இருப்பதாக நெஸ்ட்லே இந்தியா கூறியிருக்கிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் மட்டும் புதிதாக 5.1 மில்லியன் குடும்பங்கள் குடும்பங்களுக்கு பிடித்தமான ஒரு பிராண்டாக நெஸ்கஃபே மாறியிருக்கிறது. அதாவது அந்த ஓராண்டு காலத்தில் தங்கள் நிறுவனம் புதிதாக 5.1 மில்லியன் வாடிக்கையாளர்களை பிடித்திருப்பதாக கூறியுள்ளது.
இதிலும் ரெடி டூ மேக் வகையிலான கோல்டு காபி வகை தயாரிப்புகள் தான் இந்தியாவில் வேகமாக விற்பனையாக கூடியவையாக இருக்கின்றன என நெஸ்ட்லே இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த கோல்டு காபி பொருட்கள் விற்பனைக்கு முக்கிய காரணம் இளம் வாடிக்கையாளர்கள் தான் என்றும் அவர்கள் ஒரு புதிய வகையான டிரெண்டை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் நெஸ்ட்லே இந்தியா குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டில் தங்கள் நிறுவனத்தின் விற்பனை மதிப்பு 5,235 கோடி என உயர்ந்திருப்பதாக நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.5 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இது தாங்கள் கணித்த அளவைவிட அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மார்ச் உடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை 3.7 சதவீதமாகவும் உள்நாட்டு விற்பனை 4.2 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது. தங்களுடைய நிறுவனத் தயாரிப்புகளில் 8. 5 சதவீதம் ஈகாமர்ஸ் மற்றும் குயிக் காமர்ஸ் தளங்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக நெஸ்ட்லே இந்தியா தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications