டெல்லி: நெஸ்டில் இந்தியா நிறுவனம் மேகியில் முதலீடு செய்வதாக 700 - 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய போவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமான உணவான இது, மக்கள் மத்தியில் மிக பிரபலமான உணவாகவும், அனைவருக்கும் பிடித்தமான உணவாக கருதப்படுகிறது.
இது குறித்து நெஸ்டில் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் நாரயணன் கூறுகையில், குஜராத்தில் உள்ள மேகி நூடுல்ஸ் பேக்டரியில் 700- 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபுட் சேஃப்டி & ஸ்டேண்டர்டு அத்தாரிட்டி (FSSAI) கடந்த 2015ல் மேகி நூடுல்சை தடை செய்த பின்னர் இந்த நிறுவனம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் நாரயணன் கூறுகையில், நிறுவனம் அதை மீண்டும் மறு அளவீடு செய்வதாகக் கருதினார். மேலும் இது மறு சீரமைப்பு செய்ய சிறந்த வாய்ப்பாக கருதியதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் குஜராத்தில் 9-வது தொழில்சாலை அமைய உள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்பு நான் அறிவித்துள்ளேன். இதில் நாங்கள் 700 - 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் 400 புதிய தாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார். இதில் 50 சதவிகிதம் இடம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மந்த நிலையை சந்திக்க கூடும் என்றும் கூறுவது உண்மைதான். ஆனால் இது நிச்சயம் அழிவுகரமான நாள் அல்ல. இந்த நிலையில் நுகர்வு 11 - 12 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நான் இந்தியா பொருளாதாரம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறேன். இது விரைவான தீர்வாக இருக்காது. ஆனால் இது நிச்சயமான அழிவு அல்ல என்றும் கூறியுள்ளார்.
நெஸ்டில் இந்தியாவின் தலைவர் நாரயணன், சிறந்த தயாரிப்புகள் மற்றும் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்களில் கவனம் செலுத்துவதால் எந்த விதமான அதிர்ச்சியையும் எதிர்கொள்ள, எந்த விதமான அதிர்ச்சியையும் எதிர்கொள்ள எந்த காரணமும் இல்லை என்று நெஸ்டில் தலைவர் நாரயணன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications