டெல்லி: நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூல் 31.1 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து மக்களைவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அணுராக் சிங் தாக்கூர் கூறியதாவது, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் நேரடி வரி வசூலானது 1.92 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.

இதே முந்தைய ஆண்டின் இந்த காலாண்டில் நேரடி வரி வசூலானது 2.79 லட்சம் கோடி ரூபாயாக வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் நிகர மறைமுக வரி வசூலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதத்தில் 3.42 லட்சம் கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 3.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இதே கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் 1.81 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஜிஎஸ்டி வரி வசூலானது நடப்பு நிதியாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு, நாடு தழுவிய லாக்டவுனை அறிவித்தது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், நிறுவனங்கள் இன்னும் பழைய படி செயல்பட ஆரம்பிக்கவில்லை. இதனால் நிச்சயம் வரி வசூல் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. அதோடு கொரோனாவினால் நலிவடைந்து போயுள்ள நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, வரி செலுத்துவோருக்கு வரி தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் வரி வசூல் குறைய காரணமாக அமையலாம் எனவும் தாக்கூர் எழுத்துபூர்வமாக தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 6,90,500 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதுவே மறுமதிப்பீட்டில் 6,12,327 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2019 - 20ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூலானது 5,98,825 கோடி ரூபாயாக இருந்தது எனவும் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அதோடு வரி தொடர்பான புகார்களை குறைப்பதற்கும் அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது என்றும் தாக்கூர் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications