சென்னை: இந்தியாவில் மறைமுக வரியான ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவது போல் நேரடி வரி வசூல் அளவும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. மத்திய வருமான வரித்துறை செவ்வாய்க்கிழமை 2025ஆம் நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் அளவீட்டை வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறை அறிவிப்பில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 17 வரையிலான காலகட்டத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல், கடந்த ஆண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகரித்து, ரூ.4.62 லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

Direct Tax Collections: மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் 17, 2024 நிலவரப்படி, ரூ.4,62,664 கோடி நிகர நேரடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், கார்ப்ரேட் வரி (CIT) ரூ.1,80,949 கோடியும், தனிநபர் வருமான வரி (PIT) ( இதில் பத்திர பரிவர்த்தனை வரியும் உள்ளடக்கம்) ரூ.2,81,013 கோடியும் அடங்கும் என அறிவித்துள்ளது.
2024-25 நிதிய ஆண்டில் ஜூன் 17 வரை சுமார் ரூ.53,322 கோடி மதிப்பிலான வரி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட வரி திருப்பிச் செலுத்தப்பட்ட தொகையைக் காட்டிலும் 34 சதவீதம் அதிகம்.
ஏப்ரல் 1 -ஜூன் 17 க்கு இடைப்பட்ட காலத்தில், வரி திருப்பிச் செலுத்தப்பட்ட தொகையைக் கழிக்கப்படுவதற்கு முன்பு, நேரடி வரிகளின் மொத்த வசூல் ரூ.5.16 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த நிதிய ஆண்டின் அதே காலகட்டத்தில் இருந்த ரூ.4.23 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 22.19 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது.
நேரடி வரி வசூல் மூலம் இந்த நிதியாண்டில் ரூ.21.99 லட்சம் கோடி வரையில் வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மே மாதத்தில் நாட்டின் மறைமுக வரியான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி ஆகும், இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Indirect Tax collection: ஜூன் 1, 2024 மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மே 2024 மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,72,739 கோடியாகும். இது ஏப்ரல் 2024 இல் பதிவான ரூ.2,10,267 கோடி என்ற சாதனை வசூலை விட சற்று குறைவாகும்.
ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய ஜிஎஸ்டி (CGST) ரூ.32,409 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (SGST) ரூ.40,265 கோடியாகவும் இருந்தது. இதோடு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) ரூ.87,781 கோடியாகவும், கலால் வரி (Cess) ரூ.12,284 கோடியாகவும் இருந்தது. இதில், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்காக வசூலிக்கப்பட்ட வரி ரூ.39,879 கோடி (IGST) மற்றும் ரூ.1,076 கோடி (கலால் வரி) அடங்கும்.
இதை தொடர்ந்து மத்திய அரசு வசூலிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து (IGST) ரூ.38,519 கோடியை CGSTக்காகவும், ரூ.32,733 கோடியை SGSTக்காகவும் பிரித்து அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் விளைவாக, மே 2024 மாதத்திற்கான இறுதி ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடுகள், மொத்த CGST வருவாய் ரூ.70,928 கோடியாகவும், மொத்த SGST வருவாய் ரூ.72,999 கோடியாகவும் இருந்தது.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications