முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் நெட் ஜீரோ ( Net Zero) என்ற தொழில்துறை பூங்காவை திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கவும், சிங்கப்பூர் நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலேயே முதலீட்டாளர்களை அதிகம் கவரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. தொழில் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறிவருகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதுமட்டுமல்லாமல், அவ்வபோது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு சார்பிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு துறைகளிலும் ஒப்பந்தங்கள் போட்டப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு இப்போது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே நாட்டிலேயே முதல்முறையாக, சிங்கப்பூர் அரசின் உதவியுடன் தமிழ்நாடு அரசு நெட்-ஜீரோ தொழிற்பேட்டை அமைக்கவுள்ளது. இந்த தொழிற்பேட்டையில் மின்சார வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. தொழிற்பேட்டை ஒன்று நெட் ஜீரோவாக அமைவது இதுவே முதல்முறையாகும்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சிங்கப்பூரில் உள்ள இந்திய தொழில் அமைப்புகளுடன் இணைந்து, சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் " நெட் ஜீரோ" ( Net Zero) என்ற தொழில் பூங்காக்களை அமைக்க அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த தொழில் பூங்கா அமைந்தால், பூங்காவில் உள்ள அனைத்து நிறுவனங்களும், காற்றாலை, சூரிய சக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்தும். அதே போன்று பசுமை சார்ந்த தொழிலில் ஈடுபட உள்ள நிறுவனங்களுக்கு இங்கு இடம் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு, தொழில் பூங்காவுக்கான நிலத்தை, அரசு வழங்கும். ஜீரோ கார்பன் எனப்படும் கார்பனை வெளியேற்றாத நிறுவனங்கள் தொழில் தொடங்கும் வகையில் இந்த தொழில் பூங்கா அமைய உள்ளது. இதற்கு, பல்வேறு நிறுவனங்களுடன் 'டெண்டர்' கோரப்படும் என்றும், அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில், விலைப்புள்ளி வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து, பூங்கா அமைக்கப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications