பெஞ்சமின் நெதன்யாகு-வின் ரகசிய பயணம்.. அபுதாபியில் நடந்தது என்ன..?

ஈரான் - அமெரிக்கா மத்தியிலான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் கச்சா எண்ணெய் விலை குறையாமல் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-வின் சமீபத்திய பயணங்களைப் பார்க்கும் போது ஈரானுக்கு எதிராக பெரும் திட்டம் தீட்டப்படுவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

பெஞ்சமின் நெதன்யாகு ஐநா பொதுக் கூட்டத்திற்கு முன்பு அமெரிக்கா சென்று அவசர அவசரமாக நாடு திரும்பினார், இதேவேளையில் தான் டிரம்ப் கேம்ப் டேவிட் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.

பெஞ்சமின் நெதன்யாகு-வின் ரகசிய பயணம்.. அபுதாபியில் நடந்தது என்ன..?

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெஞ்சமின் நெதன்யாகு ரகசியமாகத் தனி விமானத்தில் அபுதாபி சென்று, ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சையத்தை நேரில் சந்தித்து நீண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் நாட்டின் N12 செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

Also Read

முன்கூட்டியே திட்டமிடப்படாமலும், பெஞ்சமின் நெதன்யாகு-வின் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமலும் நடந்துள்ள இந்த ரகசிய பயணம் வளைகுடா நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அபுதாபிலேயே இருந்து முகமது பின் சையத் உடன் ஆலோசனை செய்து விட்டு பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்குத் திரும்பியதாக பிரைவேட் ஜெட் விமான தரவுகள் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஐநாவின் பொதுக்கூட்டத்தில் ஈரான் குறித்து கடுமையான கருத்துக்களை முன்வைத்த பின்பு பெஞ்சமின் நெதன்யாகு-வின் இந்த அபுதாபி பயணம் பல கேள்விகளை எழுப்புகிறது.

Recommended For You

ஏற்கனவே அமெரிக்கா ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கும் இதேவேளையில் ஈரான் போர் விரைவில் முடியும் டிரம்ப் பேசியுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமரின் பயணங்கள் பெரும் போரை உருவாக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதேவேளையில் ஈரான் ராணுவம் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் வாயிலாக பெரும் தாக்குதலை நடத்த துவங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் சுமார் 19 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹார்முஸ் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் Axios-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா - ஈரான் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறும் என கூறிய சில மணி நேரத்தில் ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+