உலகம் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவி வரும் ஆன்லைன் கேமிங் மற்றும் வீடியோ கேம் கலாச்சாரம், தற்போது முக்கியமான இடத்தை எட்டியுள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முக்கிய உதாரணம் சீனாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் ஆன்லைன் கேமிங் மற்றும் வீடியோ கேம்-ல் மூழ்கியுள்ள காரணத்தால் பல தடைகளை விதித்துள்ளது. அந்த அளவிற்கு வீடியோ கேம் இன்றைய தலைமுறையைக் கட்டிப்போட்டு உள்ளது.
இதனாலேயே ஆன்லைன் கேமிங் மற்றும் வீடியோ கேம் துறை தற்போது மிகப்பெரிய வர்த்தகத் தளமாக வளர்ந்துள்ளது. ஏற்கனவே இத்துறையில் டென்சென்ட், மைக்ரோசாப்ட், சோனி எனப் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் துறையில் இறங்கியுள்ளது.
நெட்பிளிக்ஸ்
உலகிலேயே மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக உயர்ந்திருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காகக் கேமிங் துறைக்குள் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக 5 கேம்கள் கொண்டு நெட்பிளிக்ஸ் கேம்ஸ் என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது.
நெட்பிளிக்ஸ் கேம்ஸ்
தற்போது நெட்பிளிக்ஸ் கேம்ஸ் தளத்தில் ஸ்ட்ரேஜர் திங்க்ஸ் : 1984 (போனஸ் எக்ஸ்பி), ஸ்ட்ரேஜர் திங்க்ஸ் 3:தி கேம் (போனஸ் எக்ஸ்பி), ஷீட்டிங் ஹூப்ஸ் (ப்ராஸ்டி பாப்), கார்டு பிளாஸ்ட் (Amuzo & Rogue Games), மற்றும் டீட்டர் அப் (ப்ராஸ்டி பாப்) ஆகிய 5 கேம்கள் உடன் துவங்கப்பட்டு உள்ளது.
மைக் வெர்டு
நெட்பிளிக்ஸ் கேம்ஸ் அனைவருக்குமான தளமாக இருக்கும், முதல் முறையாகக் கேமிங் தளத்திற்குள் வருபவர்கள் முதல் வீடியோ கேமிங்-ல் கைதேர்ந்தவர்கள் என அனைவருக்கும் இதைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். மேலும் நாங்கள் மேக்களுக்கான லைப்ரரி-ஐ உருவாக்க உள்ளோம், இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவம் அளிக்க முடியும் என நெட்பிளிக்ஸ் கேம்ஸ் பிரிவின் துணைத் தலைவர் மைக் வெர்டு தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டு போன்கள்
தற்போது நெட்பிளிக்ஸ் கேம்ஸ் சேவை ஆண்ட்ராய்டு போன்களுக்குக் கிடைக்கிறது. இந்தச் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் கேம்களை டவுன் செய்துக்கொள்ள முடியும். இதேபோல் டேப்லெட் பயன்படுத்துவோர் மேக் என்னும் டேப்-க்கு சென்று கேம்களை டவுன்லோடு செய்துக்கொள் முடியும்.
புதிய அவதாரம்
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய அவதாரம் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் கூகிள் ப்ளே கேமிங் பிரிவு சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில் அமேசானும் நெட்பிளிக்ஸ் உடன் போட்டிப்போட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications