இந்தியாவில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வர்த்தகம் என்பது மிகப்பெரியது, இத்துறையில் முக்கியமானதாக விளங்குவது, ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் போட்டிகளின் லைவ் ஸ்ட்ரீமிங் தான். இந்தியாவில் இண்டர்நெட் டேட்டா மலிவான விலையில் கிடைக்கும் காரணத்தால் டிவியில் பார்ப்பவர்களைக் காட்டிலும் ஆன்லைனில் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால் ஐபிஎல் போட்டிகளின் ஸ்ட்ரீமிங் ஒப்பந்தத்தைப் பெறுவதில் ஒவ்வொரு வருடமும் பெரும் போட்டியே நடக்கிறது. கடந்த முறை ஆப்பிள், அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டிப் போட முயற்சி செய்தது. ஆனால் ஜியோ, ஹாட்ஸ்டார் போன்ற பெரும் திமிங்கிலம் இருக்கும் காரணத்தால் போட்டியில் இருந்து விலகியது.

இதேவேளையில் தற்போது ஜியோ, ஹாட்ஸ்டார் இணைக்கப்பட்டு உள்ளதால், டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் என இரு பிரிவும் முகேஷ் அம்பானி வசம் உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் துறையில் களத்தில் இறங்கியுள்ளது, அதிலும் குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீமிங் துறையில் இறங்கி ஆரம்பமே சாதனை படைத்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று நெட்பிளிக்ஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பார்வையாளர்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. அமெரிக்காவில் நடக்கும் தேசிய கால்பந்து லீக் (NFL) இன் இரண்டு பிரத்யேக போட்டிகளை நெட்பிளிக்ஸ் லைவ் ஸ்ட்ரீமிங் செய்தது.
நீல்சன் நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட தரவுகளின்படி, கன்சாஸ் சிட்டி சீஃப்ஸ் அணி, பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்திய போட்டியைச் சராசரியாக 24.1 மில்லியன் அதாவது 2.41 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
அதேபோல், பால்டிமோர் ரேவன்ஸ் அணி ஹூஸ்டன் டெக்சன்ஸ் அணியை வீழ்த்திய போட்டியை சராசரியாக 2.43 கோடி பார்வையாளர்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம், இரண்டு போட்டிகளும் இணைந்து அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 6.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.
ரேவன்ஸ்-டெக்சன்ஸ் போட்டியின் இடைவேளை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகி பியோன்சே நடத்திய 13 நிமிட சிறப்பு நிகழ்ச்சி அதிகப்படியான பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களின் எண்ணிக்கை 2.7 கோடியைத் தாண்டியது. இது நெட்பிளிக்ஸ் தளத்திற்கான புதிய சாதனையாகும். இந்த போட்டிகளைக் கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி, பியோன்சே நிகழ்ச்சியைக் காண விரும்பிய இசை ரசிகர்களும் அதிகளவில் கண்டுகளித்தனர்.
NFL உடன் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிறிஸ்துமஸ் தின போட்டிகளை நெட்பிளிக்ஸ் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யும் உரிமையைப் பெற்றது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியின்படி, ஒவ்வொரு போட்டிக்கும் நெட்பிளிக்ஸ் 75 மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டுக்கான பிரத்யேக ஸ்ட்ரீமிங் உரிமைகளுக்காக மொத்தம் 150 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது நெட்பிளிக்ஸ்.
இந்த வெற்றி அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் ஒப்பந்தத்தைக் கைப்பற்ற நெட்பிளிக்ஸ் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications