சர்வதேச அளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் மக்களை கவரும் வகையில் விறுவிறுப்பான வெப் சீரிஸ், பல்வேறு மொழி திரைப்படங்கள், கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் என பலவும் ஒளிப்பரப்பாகின்றன. இதனால் இது மக்களின் மனம் கவர்ந்த ஒடிடி தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தியாவில் அதிக வருமானத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களை கொண்டு வந்தது, குறிப்பாக லெகேஷன் அடிப்படையிலான மாற்றம், கட்டணத்தில் மாற்றம், மொபைல் வாடிக்கையாளர்களை ஈர்க்க டெலிகாம் நிறுவனங்களுடன் கூட்டணி என பல வேலைகளை நெட்பிளிக்ஸ் செய்தது.

இன்றைய வர்த்தக சந்தையில் பொதுபோக்கும், விளையாட்டும் பெரும் வர்த்தகமாக பார்க்கப்படுகிறது. இதனால் நெட்பிளிக்ஸ் இந்த போட்டிக்குள் நுழைவதை அதிகாரப்பூர்வமாக தனது போட்டி நிறுவனங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலை முதல் முறையாக வெளியிட்டு உள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு வரை தனது தளத்தில் பார்வையாளர்கள் அதிகம் பார்த்த நிகழ்ச்சி குறித்த விவரங்களை வெளியிட்டது இல்லை. இந்நிலையில் தற்போது முதல் முறையாக தனது ஒடிடி தளத்தில் பிரபலமான நிகழ்ச்சிகளை பார்க்க இவ்வளவு நேரம் செலவிட்டுள்ளார்கள் என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள 'What We Watched'அறிக்கையில், 2023ம் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்) நெட்பிளக்ஸ் சந்தாதாரர்கள் அதிக மணி நேரம் பார்த்த டாப் 5 நிகழ்ச்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், முதல் இடத்தில் The Night Agent என்ற வெப்சீரியஸின் முதல் சீசன் உள்ளது. இது நெட்பிளிக்ஸில் 81 கோடி மணி நேரத்துக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் Ginny & Georgia-ன் இரண்டாவது சீசன் உள்ளது. இந்த தொடரை நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் 66 கோடி மணி நேரம் பார்த்து ரசித்துள்ளனர்.
தென்கொரிய ஒரிஜினல் வெப்சீரிஸ் The Glory 3வது இடத்தில் உள்ளது. இந்த தொடரை சந்தாதாரர்கள் 62 கோடி மணி நேரம் கண்டு களித்துள்ளனர். Wednesday தொடரின் முதல் சீசன் 50 கோடி மணி நேரம் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் பார்த்துள்ளனர். இந்த தொடர் 4வது இடத்தில் உள்ளது.
Queen Charlotte 5வது இடத்தில் உள்ளது. இந்த தொடரை பார்க்க சந்தாதாரர்கள் 50 கோடி மணிநேரம் செலவிட்டுள்ளனர். மொத்தத்தில் நெட்பிளிக்ஸில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் 10,000 கோடி மணி நேரம் பார்க்கப்பட்டுள்ளன.
இதுவே இந்தியா-வை பொருத்த வரையில் பார்த்தால் ரானா நாயடு 401 இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து Chor Nikal Ke Bhaga,
Mission Majnu, Mrs Chatterjee vs Norway, Class, Tu Jhoothi Main Makkaar, Shehzada, Scoop ஆகியவை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நெட்பிளக்ஸின் இணை தலைமை நிர்வாகி டெட் சரண்டோஸ் பேட்டி ஒன்றில், பார்வையாளர்களின் தரவை வெளிப்படுத்த கூடாது என்ற தளத்தின் கொள்கை, படைப்பாளி சமூகத்தில் அவநம்பிக்கையை ஆகியவற்றை கருத்தில் கொண்டு போட்டியாளர்களுக்கு தரவை இதுவரை பார்வையாளர்களின் புள்ளிவிவரங்களை ரகசிகசியமாக வைத்திருந்தோம் என்று தெரிவித்தார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் இனி ஆண்டுக்கு இருமுறை 'What We Watched' அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications