சர்வதேச அளவில் வைஃபை மற்றும் இணையதள சேவைகளுக்கு தேவையான வன்பொருட்களை தயாரித்து வழங்கக்கூடிய உலகின் முன்னணி நிறுவனமான நெட்கியர் (Netgear) இந்தியாவில் முதலீடு செய்து ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது நெட்கியர் நிறுவனம். கிட்டத்தட்ட 22 நாடுகளில் அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. தனிப்பயன்பாடு, அலுவலகங்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கு தேவையான வைஃபை மற்றும் ரௌட்டர்கள் உள்ளிட்ட இணையதள வசதிக்கு தேவையான கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் முதலீடு செய்து தங்கள் ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்திய சந்தையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் நெட் கியர் நிறுவனம் இந்தியாவில் தங்களது ஊழியர்களை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதே வேளையில் இந்தியாவினுள் தங்களது தயாரிப்பு ஆலையை நிறுவுவதற்கும் இந்த நிறுவனம் வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறது.
நெட்கியர் நிறுவனத்தின் கமர்சியல் வணிகத்தை பொறுத்தவரை அதன் வருவாயில் 10% இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. நிறுவனத்தில் உள்ள 650 ஊழியர்களில் 65 பேர் இந்தியாவில் உள்ளனர்.
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவது மற்றும் இந்தியாவில் இணையதள வசதிகளுக்கான தேவை அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் தங்களது நிறுவனம் இங்கே மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என நெட்கியர் நிறுவனம் நம்புகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் இந்தியாவிற்கு உள்ளேயே உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. ஆனால் இதற்கான தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தங்களது ஆலை இந்திய பொருளாதாரத்திற்கும் தங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவும் என இதன் தலைமை கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் நெட் கியர் நிறுவனம் இந்தியாவில் உள்ள தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தற்போது 20 நகரங்களில் தங்களது சேவைகளை வழங்கி வரக்கூடிய நெட்கியர் நிறுவனம் கூடிய விரைவில் இதனை 30 நகரங்களுக்கு என விரிவுப்படுத்த இருப்பதாக கூறியுள்ளது.
இந்த நிறுவனம் பெங்களூருவில் இரண்டு இடங்களில் புதிதாக அலுவலகங்களையும் திறந்துள்ளது. இதில் 20,000 சதுர அடியில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அலுவலகம் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தை பொறுத்தவரை வைஃபை இணைப்பு கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து உலக அளவில் விற்பனை செய்து வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications