அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவி ஏற்றார். அவர் தொடக்கம் முதலே பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்தியாவுடன் வர்த்தக மோதலை கைப்பிடிக்கும் டொனால்ட் டிரம்ப் மறுபுறம் பாகிஸ்தானுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார் .
மோடி என்னுடைய நண்பர் என கூறும் டிரம்ப், மறுபுறம் பாகிஸ்தானுக்கு தேவையான நிதி உதவிகளையும் செய்து வருகிறார். இத்தகைய சூழலில் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் நடந்த கார் குண்டு கார் வெடிப்பு குறித்து அமெரிக்க அரசாங்கம் கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாடு தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது .

திங்கட்கிழமை அன்று மாலை 6:52 மணி அளவில் செங்கோட்டை அருகே திடீரென ஒரு கார் வெடித்து சிதறியது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்து இருக்கின்றனர். தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த இந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும், அதிபர்களும் ,பிரதமர்களும் இந்தியாவுடன் இந்த தருணத்தில் துணை நிற்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். இதே சூழலில் தான் பாகிஸ்தானிலும் இஸ்லாமாபாத்தின் நீதிமன்ற வளாகத்தில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அமெரிக்கா அரசு எதிர்வினை ஆற்றி இருக்கும் முறை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது .
இந்தியாவில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் டெல்லியில் நடந்த பயங்கர வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம் என கூறியுள்ளது. அதே வேளையில் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் பகுதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம்" பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா துணை நிற்கிறது , இந்த முட்டாள்தனமான தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் "எனக் கூறியிருக்கிறது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் இந்த தாக்குதலையும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் நாங்கள் கண்டிக்கிறோம் மேலும் நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருக்கிறது.
இரண்டு நாடுகளிலும் நடந்த தாக்குதலை அமெரிக்கா எப்படி பார்க்கிறது என்பது அதன் இரங்கலுக்கான வார்த்தை பயன்பாட்டிலேயே தெரிய வருகிறது என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். அமெரிக்க தூதரகம் இந்தியாவில் நடந்த தாக்குதலை பயங்கரவாதம் என குறிப்பிடாமல் வெறும் வெடிப்பு என்றே கூறுகிறது, ஆனால் பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்கிறோம் எனக் கூறியிருக்கிறதே என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
தினேஷ் அலுவாலியா என்பவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கா குடிமகன் என்ற முறையில் கூறுகிறேன் அமெரிக்கா அரசாங்கம் வெறும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இது ஒரு பயங்கரவாதம் என்பதை தன்னுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்.
ஒரு பயனர் " இந்தியாவில் நடந்த நிகழ்வு வெறும் வெடிப்புதான் ,பாகிஸ்தானில் நடந்தால் மட்டும் அது பயங்கரவாத தாக்குதலா" என கூறியுள்ளார். இதுதான் அமெரிக்காவின் உண்மையான முகம் என ஒரு பயனர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு இதன் மூலம் வெளிவந்து விட்டது என கூறியிருக்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications