மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு பல முயற்சிகளைச் செய்து வரும் எலான் மஸ்க், அவருடைய வியப்பளிக்கும் வெற்றி பயணத்தில் புதிய மைல்கல்லாக அவருடைய நியூராலிங்க் நிறுவனம் அமெரிக்க அரசின் ஒப்புதலை தொடர்ந்து முதல் முறையாக மனித மூளையில் சிப் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளது.
எலான் மஸ்க் 2016ல் நியூராலிங்க் என்னும் நியூரோடெக்னாலஜி நிறுவனத்தை நிறுவினார், இந்நிறுவனம் மனித மூளைக்கும், கம்ப்யூட்டருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதன் வெற்றியாக நரம்பியல் தொடர்பான வியாதிகளுக்குத் தீர்வு காண முடியும் எனக் காட்டியுள்ளார்.

எலான் மஸ்க்-ன் நியூராலிங்க் உருவாக்கியுள்ள சிப் மற்றும் தொழில்நுட்பம் மூலம் ALS, Parkinsons போன்ற நரம்பியல் தொடர்பான வியாதிகளுக்குத் தீர்வு காண முடியும் எனப் பல சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தச் சிப் குரங்குகளுக்கு வைத்துப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் ஆய்வு முடிவுகளை அமெரிக்க FDA அமைப்பிடம் முன்வைக்கப்பட்டுச் சில மாதங்களுக்கு முன் மனித மூளையில் சிப் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நியூராலிங்க் பல கட்ட ஆய்வுகளைச் செய்து ஒரு நோயாளியை தேர்வு செய்தனர். தற்போது இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருடைய மூளையில் சிப் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் எலான் மஸ்க் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சிப் வைக்கப்பட்டதில் ஆரம்பக்கட்ட தீர்வுகளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் நியூரான் ஸ்பைக் கிடைத்துள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். நியூராலிங்க் உருவாக்கியுள்ள இந்தச் சிப் பெயர் "Link", இது 5 நாணயங்களை அடுக்கி வைத்தது போல் வடிவத்தில் இருக்கும்.
கலிப்போர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூராலிங்க் நிறுவனத்தில் இதுவரையில் 400 பேர் பணியாற்றும் வேளையில் 363 மில்லியன் டாலர் தொகையை முதலீடாகத் திரட்டியுள்ளது. எலான் மஸ்க்-ன் நியூராலிங்க் உருவாக்கிய இந்தக் கட்டமைப்பின் பெயர் brain-computer interface research அல்லது ப்ரைன் மெஷின் என அழைக்கப்படுகிறது. இத்துறையில் நியூராலிங்க் முன்னோடியாக உள்ளது.
மேலும் இந்தச் சிப் வைக்க மண்டை ஓட்டை திறக்கும் கடினமான அறுவை சிகிச்சை தேவையில்லை, invasive surgery எனப்படும் துளையிட்டு ஊடுருவும் அறுவை சிகிச்சை மூலம் சிப் மனித மூளைக்குள் பொருத்தப்படும்.
நியூராலிங்க் நிறுவனத்திற்கு முன்பு 2022 ஜூலை மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் Synchron என்னும் நிறுவனம் உருவாக்கிய சிப் அமெரிக்க நோயாளி மூளையில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications