கொழும்பு: நமது அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று இடது சாரி இயக்கத்தை சேர்ந்த அனுர குமார திசநாயக்க நாட்டின் அதிபராகியுள்ளார். இவர் இந்தியா மற்றும் சீனா இடையே இலங்கை சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய வெளியுறவு கொள்கை குறித்த ஒரு உறுதியான நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் இலங்கையின் புதிய அதிபராகவும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் குறிப்பாக இந்திய பிரதமர் மோடி , சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அனுர குமார திசநாயக்க தலைமையிலான அரசு வெளியுறவு கொள்கையில் எப்படி செயல்படும் இந்தியாவுடன் நட்புறவு மேற்கொள்ளுமா அல்லது சீன சார்பு நிலையை மேற்கொள்ளுமா என பல்வேறு ஊகங்கள் எழுந்த நிலையில் தன்னுடைய வெளியுறவு கொள்கை குறித்து ஒரு இதழுக்கு அவர் விரிவாக பேட்டி அளித்துள்ளார்.
என்னுடைய தலைமையிலான ஆட்சியின் கீழ் இலங்கை புவிசார் அரசியல் போட்டிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்துவேன் என அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு அதிகாரத்துடனும் இணைந்து செயல்படுவதற்கு பதிலாக தனது அரசாங்கம் இலங்கையின் மிக நெருக்கமான அண்டை நாடுகளாக இருக்கும் சீனா மற்றும் இந்தியாவுடன் சம நிலையான உறவுகளை வளர்க்க விரும்புகிறது என தெரிவித்துள்ளார். மேலும் புவிசார் அரசியல் போட்டியில் நாங்களும் ஒரு போட்டியாளராக இருக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
எந்த நாட்டுடனும் இணைந்து நாங்கள் அடையாளப்படுத்தி கொள்ளபோவதில்லை, குறிப்பாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இலங்கையின் மதிப்புமிக்க நண்பர்கள் எனவே இரு நாடுகளுடனும் நெருக்கமான பங்காளிகளாக மாறுவதே எங்களின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா உடனான உறவுகளையும் தொடர விரும்புவதாக திசநாயக்க கூறியுள்ளார்.
வெளியுறவு கொள்கையினை பொறுத்தவரை அனுர குமார திசநாயக்க நடுநிலையான அணுகுமுறையை கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தன்னுடைய முதன்மையான வேலை என்பதையும் திசநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்ற வகையில் கொள்கைகளை மாற்ற இருப்பதாகவும் சீர்த்திருத்தங்கள் கொண்டு வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications