டெல்லி: சர்வதேச அளவில் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கிய ஊழியர்கள் பணி நீக்கம் என்பது முடிவே இல்லாத வகையில் 2024ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.
பல பிரதான தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இதன் மூலம் நடப்பாண்டில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

ஆப்பிள், அமேசான், மெட்டா, டெல் போன்ற பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோல ஊழியர்களை பணி நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. சிக்கன நடவடிக்கை, நிறுவன மறுசீரமைப்பு போன்ற காரணங்களை கூறி இவ்வாறு பணி நீக்க அறிவிப்புகளை வெளியிடுகின்றன. 2024 ஆம் ஆண்டில் எந்தெந்த நிறுவனங்களில் பணி நீக்கம் என்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சமூக சேவை மற்றும் சுகாதாரத்துறை: குறிப்பாக மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கான தேவை என்பது நீடித்த வண்ணமே இருக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் எந்த நிலைமையில் இருந்தாலும் அங்கே மருத்துவ சேவைகள் என்பது கட்டாயம் தேவைப்படும் ஒன்றாகத்தான் இருக்கும். அதுமட்டுமின்றி அரசுகளும் மருத்துவத்துறைக்கான ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் இந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பணி நீக்கம் என்ற பிரச்சனை ஒருபோதும் இருக்காது.
சில்லறை வர்த்தகம் மற்றும் உணவுத்துறைகள்: இந்த துறைகளில் எப்பொழுதுமே ஊழியர்கள் பணி நீக்கம் என்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. மக்களிடையே மளிகை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகளவிலேயே இருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும், இவற்றுக்கான தேவை ஒரு போதும் நீங்காது. எனவே இந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பணி நீக்கம் என்ற பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது.
இந்தியாவை பொறுத்தவரை சில்லறை சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை என்பது 2027 ஆம் ஆண்டு 1.1 ட்ரில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்ட இருக்கிறது. ஹோட்டல் மற்றும் தங்கும் இடங்களுக்கும் இந்தியாவில் மற்றும் உலக அளவில் தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் ஹோட்டல் துறை நேரடியாக நம் நாட்டு ஜிடிபி-இல் 40 பில்லியன் டாலர்களை வழங்குகிறது. இது 2027 ஆம் ஆண்டு 68 பில்லியன் டாலர்களாக உயரும் என்றும் 2047 ஆம் ஆண்டு 1 ட்ரில்லியன் என்ற அளவை எட்டும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பணி நீக்கம் என்ற பிரச்சனை ஒருபோதும் இருக்காது.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications