சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான டாடா குழுமத்தில் சமீப காலமாக ரத்தன் டாடா, நோயல் டாடா தொடர்ந்து அடுத்த தலைமுறையினர் முக்கிய பதவிக்கு வர துவங்கியுள்ளனர். அந்த வகையில் 32 வயதான நெவில் டாடா தற்போது டாடா குழுமத்தின் ரீடைல் வர்த்தக பிரிவான ட்ரெண்ட் லிமிடெட்-ன் ஹைப்பர் மார்க்கெட் பிரிவான ஸ்டார் பஜார்-ன் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் அடுத்த தலைமுறையினர் அதிகாரப்பூர்வமாக நிர்வாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாகப் பல வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் இளம் தலைமுறையினர் அதிகாரத்திற்கு வருகிறார்கள், இதன் மூலம் இந்திய வர்த்தக துறையில் புதிய வேகம் பிறந்துள்ளது. ரிலையன்ஸ், அதானி, டிவிஎஸ், பிர்லா முதல் பல வர்த்தக குழுமத்தில் இளம் தலைமுறையினர் அதிகாரத்திற்கு வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது டாடா குழுமமும் இணைந்துள்ளது.

நெவில் டாடா, ட்ரெண்ட் லிமிடெட்-ன் தலைவர் நோயல் டாடா-வின் மகன் ஆவார். நோயல் டாடா, டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் சகோதரர் ஆவார்.
நெவில் டாடா சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைப்பர் மார்க்கெட் வணிகத்தில் பணியாற்றினார், பின்னர் வெளிநாடுகளுக்குச் படிக்க சென்றதால் இப்பதவியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பேய்ஸ் பிசினஸ் ஸ்கூலின் மாணவரான நெவில் டாடா, 2016 ஆம் ஆண்டு முதல் ட்ரெண்ட் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றத் துவங்கினார்.
நெவில் டாடா, ட்ரெண்ட் லிமிடெட்-ன் மளிகை பொருட்கள் ரீடைல் விற்பனை துணை நிறுவனமான ட்ரெண்ட் ஹைப்பர் மார்க்கெட்டின் நான் எக்ஸ்கியூட்டிவ் டைரெக்டராக இதற்கு முன்பு பணியாற்றினார். ஆனால், அவர் தற்போது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ட்ரெண்ட் லிமிடெட் தனது ஹைப்பர் மார்க்கெட் வணிகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் முக்கிய நபராக திகழ்கிறார். மேலும் பி. வெங்கடேசலு தான் தற்போது ட்ரெண்ட் லிமிடெட்-ன் சிஇஓ ஆவார். ட்ரெண்ட் நிறுவனத்தின் கீழ் வெஸ்ட்சைடு, ஜூடியோ மற்றும் சாரா பிராண்ட் ரீடைல் கடைகளையும் நடத்துகிறது. இதன் கீழ் தான் ஸ்டார் பஜார் போன்ற மளிகை கடை பொருட்கள் விற்பனை பிரிவும் உள்ளது.
நெவில் டாடா முதலில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்கள் பிரிவுக்குத் தலைமை தாங்கிய பின்னர், நாட்டின் மிகப்பெரிய ஆடை பிராண்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜூடியோவை நிர்வகித்தார். தற்போது ஸ்டார் பஜார்-க்கு தலைவராகியுள்ளார்.
நெவில் டாடா போலவே நோயல் டாடாவின் மகள்களும் டாடா குழும நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். லியா டாடா (39) சமீபத்தில் இந்தியன் ஹோட்டல்களில் கேட்வே பிராண்டின் பொறுப்பேறார், அங்கு அவர் சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அனலிட்டிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மாயா டாடா, டாடா டிஜிட்டலில் பணியாற்றுகிறார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications