விஜய் ஓகே சொன்னா போதும்.. திருச்சி மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் குட்நியூஸ்! #SIPCOT

திருச்சி தொழிற்துறையின் விரிவாக்கத்திற்கு பெரும் பங்காற்றும் மணப்பாறை சிப்காட் பகுதியை விரிவாக்கம் செய்ய புதிதாக 288 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொடுத்த அமோச வரவேற்பு காரணமாக பெருமளவிலான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது இத்தொழிற் பகுதியை விரிவாக்கம் செய்ய திட்டத்தை சிப்காட் அதிகாரிகள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

விஜய் ஓகே சொன்னா போதும்.. திருச்சி மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் குட்நியூஸ்! #SIPCOT

சிப்காட் அமைப்பு மணப்பாறை அருகில் கண்ணுதையன்பட்டி பகுதியில் அமைத்திருக்கும் சிப்காட் பகுதியில் வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் மரவனூர் என்னும் கிராமத்தில் சுமார் 288 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு உள்ளது.

இதை கைப்பற்றி தொழிற் பகுதியாக மாற்றும் பட்சத்தில் புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்த விரிவாக்கம் முதல் திருச்சி முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் அண்டை மாவட்டமான கரூர், திண்டுக்கல் மாவட்ட முதலீட்டாளர்களையும் ஈர்க்க முடியும், மேலும் இது பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைத்திருக்கும் காரணத்தால் வெளிமாநில வர்த்தகத்திற்கும் இந்த சிப்காட் ஏற்றதாக உள்ளது.

சுமார் 1097.36 ஏக்கர் கொண்ட மணப்பாறை சிப்காட் பகுதியில் 131 ஏக்கர் நிலம் சிட்கோ அமைப்பிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது, 258.60 ஏக்கர் நிறுவனங்களுக்கும், 300 ஏக்கர் நிலம் சாலை, அடிப்படை வசதிகள் மற்றும் எதிர்கால திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட உள்ளது.

இதேவேளையில் மணப்பாறை சிப்காட்-ல் 43 கோடி ரூபாய் மதிப்பில் இறுதிக்கட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு உள்ளதாக சிப்காட் அதிகாரி தெரிவித்துள்ளார், இந்த பணிகள் முடிந்த உடன் மீதமுள்ள நிலமும் அடுத்த ஒருவருடத்திற்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

அடுத்தாக முதல்வர் விஜய் புதிய நில கைப்பற்றல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் அடுத்த 6-9 மாதத்திற்குள் மரவனூர் கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட சுமார் 288 ஏக்கர் நிலம் முழுமையாக கைப்பற்றப்படும் என தெரிவித்தார்.

மறுமுனையில் 148.9 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகியிருக்கும் திருவெரும்பூர் சிப்காட் தொழிற்பூங்காவில் நில ஒதுக்கீடு பணிகள் துவங்கி 6 மாதங்கள் ஆன நிலையில், இதுவரையில் ஒருவர் கூட நிலத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையும் உள்ளது.

திருச்சியில் உருவாகியிருக்கும் இரு புது சிப்காட் பகுதிக்கும் மத்தியிலான வித்தியாசம் பெரும் அதிர்ச்சி கொடுத்தாலும், இதற்கான காரணமும் உள்ளது. அதாவது மணப்பாறை சிப்காட் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் காரணத்தால் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

இதனால் திருவெரும்பூர் சிப்காட் திருச்சி நிறுவனங்கள் அதாவது உள்ளூர் சந்தைக்கான நிலமாக உள்ளது. இதனால் திருவெரும்பூர் சிப்காட்டில் நிறுவனங்கள் வருவதற்கு சில காலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+