இந்தியாவில் அரசின் சேவைகள் மட்டும் இல்லாமல் தனியார் சேவைகளை பெறுவதற்கும் ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாக கேட்கிறார்கள். புதிதாக நாம் ஒரு சிம்கார்டு வாங்க வேண்டும் என்பது தொடங்கி வெளியூருக்கு செல்கிறோம் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்குகிறோம் எனும் போதும் கூட நம்முடைய அடையாள ஆவணமாக ஆதாரை கேட்கிறார்கள்.
நாம் ஆதார் விவரங்களை பகிரும்போது குறிப்பாக ஆதார் நகல்களையும், புகைப்படங்களாகவும் பகிரும்போது அவை தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்த சூழலில் தான் ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் அணுகும் விதத்தை கட்டுப்படுத்தவும் குறிப்பிட்ட தகவல்கள் மட்டுமே அவர்கள் வசம் செல்வதை உறுதிப்படுத்தவும் யுஐடிஏஐ முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது .

இதன் மூலம் நம்முடைய ஆதார் விவரங்களில் எவையெல்லாம் குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு காட்டலாம் என்பதை மக்களாகிய நாமே முடிவு செய்து கொள்ள முடியும். ஆதார் விவரங்களை சரி பார்ப்பதற்கு இனி நம்முடைய முக அடையாளம் மட்டுமே போதுமானது. உதாரணமாக நீங்கள் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குகிறீர்கள் எனும் போது உங்களுடைய ஆதார் கியூ ஆர் கோடை காட்டி உங்களுடைய முகத்தை ஸ்கேன் செய்து இரண்டுமே ஒருவர் தான் என்பதை உறுதி படுத்தினாலே போதும்.
உங்களுடைய மற்ற ஆதார் விவரங்கள் அந்த குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகத்திற்கு செல்லாது. எனவே அரசின் சர்வர்களோடு இணைக்காமலேயே ஆதார் விவரங்களை சரி பார்க்கக்கூடிய நடைமுறையும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும் இது நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதாவது முக அடையாள சரிபார்ப்புக்கு அரசு அங்கீகாரம் தந்துள்ளது.
முக அடையாள சரிபார்ப்பு முடித்தாலே போது நம் ஆதார் எண், முகவரி உள்ளிட்டவற்றை எல்லாம் நாம் பகிர வேண்டாம். பயோமெட்ரிக் விவரங்கள் வேலை செய்யாத இடங்களில் முக அடையாள சரிபார்ப்பை நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். மேலும் இது நேரத்தையும் மிச்சப்படுத்து. இது தவிர மக்கள் தங்களுடைய ஃபோனில் இருக்கும் ஆதார் செயலியில் கியூஆர் கோடினை மட்டும் காட்டினாலே போதும்.
இது வரை நிறுவனங்கள் ஆதார் தரவுதளங்களை அனுகும் வாய்ப்பை பெற்றிருந்தன, இதன் மூலம் நம் முழுமையான தகவல்களையும் அவர்கள் பார்க்கலாம், ஆனால் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் செக் இன் செய்வது ஒரு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது டிக்கெட் முன்பதிவு செய்வது உள்ளிட்டவற்றில் ஆன்லைன் அதாவது உங்களுடைய பயோமெட்ரிக் தகவல்கள் எதையும் அணுகாமல் முக அடையாள சரி பார்ப்பின் மூலமே நீங்கள் தான் என உறுதிப்படுத்தலாம்.
இதனை proof of presence என அழைக்கிறார்கள். எனவே தேவையில்லாமல் மக்களின் தனிப்பட்ட தகவல்களை நிறுவனங்கள் அனுகுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நம் ஆதாரில் உள்ள எந்தெந்த தகவல்களை மட்டும் பகிரலாம் என்பதையும் முடிவு எடுத்துக் கொள்ளக்கூடிய உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. பெயர், வயது, புகைப்படம், முகவரி என அந்த சமயத்தில் அந்த குறிப்பிட்ட சேவைக்கு எந்த தகவல் தேவையோ அதை மட்டுமே நாம் வழங்க முடியும்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த டிஜிட்டல் பர்சனல் டேட்டா ப்ரொடக்ஷன் ஆக்ட் அதாவது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு இணங்க இந்த மாற்றம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது .


Click it and Unblock the Notifications