முதலீடு பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து எதில் வருமானம் அதிகமாக கிடைக்கும் என்று மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வது லாபகரமானதாக மாறி வருகிறது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களில் முதலீடு செய்வதை லாபகரமானதாகக் கருதுகின்றனர்.
ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்திருப்பதன் காரணமாக இதுபோன்ற துறைகளில் முதலீடு செய்வது லாபகரமான மாற்றாக இருக்கும்.

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சார்ந்த ETF-கள்: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற துறைகளில் முன்னணியில் உள்ள உலகளாவிய நிறுவனங்களின் ETF-களில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு சிறந்த வழியாக இருக்கும். பங்குச்சந்தை குறித்து அதிக அனுபவம் இல்லாதவர்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆர்வம் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற ETF-கள் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.
கிரிப்டோ SIP: பிட்காயின் போன்ற முன்னணி கிரிப்டோகரன்சி SIP-களில் முதலீடு செய்யலாம். எஸ்ஐபி முதலீடுகள் இளம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த முதலீட்டு தேர்வு. நீண்ட காலத்திற்கு லாபத்தை ஈட்ட இது போன்ற எஸ்ஐபி-கள் உதவும். சிறிய தொகையில் தொடங்கி முதலீடு செய்வதன் மூலம் சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயத்தை குறைத்து வருமானம் பெற முடியும்.
கிரீன் பாண்ட்ஸ்: கிரீன் பாண்ட்ஸ் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற திட்டங்களுக்காக நிதியளிப்பதற்காக வெளியிடப்படும் கடன் பத்திரங்கள். இதுபோன்ற பத்திரங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் போது அவற்றை புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீர் மேலாண்மை, பசுமை கட்டிடங்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்துவார்கள். இப்படி செய்தால் உங்கள் முதலீட்டுக்கு நிலையான வருமானம் கிடைக்கும்.
டிஜிட்டல் கோல்ட்: யுபிஐ அப்ளிகேஷன்கள் மூலம் 10 ரூபாயில் தொடங்கி டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பாக முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வழி.
பியர்-டு-பியர் கடன்: ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பியர்-டு-பியர் கடன் வழங்கும் தளங்களையும் நீங்கள் ஆராயலாம். கடன் வாங்குபவர்களுக்கு நேரடியாகக் கடன் வழங்குவதன் மூலம் வருமானத்தைப் பெறலாம்.
எப்போதுமே மக்கள் தேர்ந்தெடுக்கும் பொது வருங்கால வைப்பு நிதி, பிக்சட் டெபாசிட்கள் தங்கம் போன்றவற்றுக்கு மாற்றாக முதலீடு செய்ய விரும்பினால் இது போன்ற திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications