இந்தியாவில் முன்னனி தொலைதொடர்பு சேவை நிறுவனமாக மாறி இருக்கும் ஜியோ நிறுவனம், பிராட்பேண்ட் சேவையிலும் முதலிடத்தை பிடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக அட்டகாசமான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் தங்களுடைய ஏர் பைபர் (AirFiber) சேவைகளை இணைப்பை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 30% தள்ளுபடி அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய பிராட்பேண்ட் சேவையாக ஜியோவின் ஜியோ பைபர் அல்லது ஏர் பைபர் இருக்கிறது. கிட்டத்தட்ட 1.2 கோடி இணைப்புகளுடன் ஜியோ பைபர் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தங்களுடைய ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கக்கூடிய ஜியோ ஏர் பைபர் திட்டங்களில் கூடுதலாக 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ரீடம் ஆஃபர் என்ற பெயரில் இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. புதிதாக ஜியோ ஏர் பைபர் பிராட்பேண்ட் இணைப்பைப் பெறக்கூடிய வாடிக்கையாளர்கள் 30 சதவிகிதம் தள்ளுபடி பெறுவார்கள், இந்த தள்ளுபடியானது ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கிடைக்கும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் இன்ஸ்டாலேஷனுக்கான 1000 ரூபாய் பணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிதாக பிராட்பேண்ட் சேவையை பெறுபவர்கள் 1000 ரூபாயை மிச்சப்படுத்தலாம்.
ஜியோ இணையதளத்திற்கு சென்று ஜியோ பைபர் சேவை வேண்டுமென விண்ணப்பம் செய்யலாம் அல்லது 60008-60008 இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் வழங்கலாம். ஜியோ நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தன்னுடைய வயர்லெஸ் ஏர் பைபர் சேவையை அறிமுகம் செய்தது. வயர்லெஸ் முறையில் அதாவது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய கருவி வழங்கப்படும் அதனை மட்டும் வீட்டில் வைத்தாலே போது வைஃபை வசதி கிடைத்துவிடும்.
வயர்களை இழுக்க வேண்டும் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற எந்த வேலையும் கிடையாது. தற்போது ஏர் பைபர் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 400gb டேட்டாவை பயன்படுத்துகிறார்கள். இந்த ஒரு வைஃபை பாக்ஸை கொண்டு பல்வேறு கருவிகளிலும் இணைய சேவையை பெற முடியுமாம். இதில் 1 Gbps என்ற வேகத்தில் கூட இணைய சேவை கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications