கோவிட் 19 தாக்கமே இன்னும் குறையல.. அதுக்குள்ள அடுத்த வைரஸா? சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புது வைரஸ்!

சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வௌவால்களிலிருந்து பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளனர். HKU5-CoV-2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் கோவிட்-19-ஐ ஏற்படுத்திய SARS-CoV-2 வைரஸை போலவே மனிதர்களின் செல்களுக்குள் நுழைந்து தாக்கக்கூடிய திறன் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய வைரசின் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் புதிய தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019-ஆம் ஆண்டு ஒரு போராட்டம் நிறைந்த ஆண்டாக தான் அமைந்தது. அந்த ஆண்டின் இறுதியில் தான் கோவிட் 19 கண்டறியப்பட்டது. கோவிட்-19 என்ற தொற்றுநோய் SARS-CoV-2 என்னும் வைரசால் ஏற்பட்டது. இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனால் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலரும் வேலையிழந்து பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்தனர்.

கோவிட் 19 தாக்கமே இன்னும் குறையல.. அதுக்குள்ள அடுத்த வைரஸா? சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புது வைரஸ்!

இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவை தான் கோவிட்-19 இன் பொதுவான அறிகுறிகளாக இருந்தன. அதோடு சிலருக்கு சுவாச கோளாறுகளும் ஏற்பட்டது. அதன் பிறகு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை கண்டுபிடித்து கோவிட்-19 கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இன்னும் கோவிட் 19 ஏற்படுத்திய தாக்கமே முழுமையாக சரியாகாத நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

செல் சயின்டிபிக் ஜர்னல் என்னும் இதழில் வெளியான இந்த புதிய வைரஸ் குறித்த ஆய்வு, குவாங்சோ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. சீனாவை சேர்ந்த முன்னணி வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி இந்த ஆய்வை நடத்தினார். கொரோனா வைரஸ் குறித்த விரிவான ஆராய்ச்சிக்காக "பேட் வுமன்" என்று அழைக்கப்பட்ட இந்தப் பெண்மணி தான் தற்போது இந்த புதிய வைரஸ் குறித்த ஆய்வை வெளியிட்டுள்ளார்.

HKU5-CoV-2 என்றால் என்ன?: சீனாவில் உள்ள வௌவால்களில் HKU5-CoV-2 எனப்படும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் அபாயம் இருந்தபோதிலும், விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவுவது குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ்கள் இருந்தாலும், ஒரு சில மட்டுமே மனிதர்களைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள HKU5-CoV-2 என்ற புதிய வைரஸ் பைபிஸ்ட்ரெல் வௌவாலிடமிருந்து கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் 19-ஐ ஏற்படுத்திய SARS-CoV-2 என்ற வைரஸைப் போலவே இந்த வௌவால் வைரஸும் அதனுடைய மேற்பரப்பில் ஃபுரின் பிளவு தளம் எனப்படும் ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளது இது செல்களுக்குள் நுழைய உதவும் வகையில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

HKU5-CoV-2 வைரஸை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றிய ஷி ஜெங்லி, வுஹானில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியிளும் பணிபுரிந்திருக்கிறார்.வுஹானில் இருந்து தான் இந்த வைரஸ் தோன்றியது என பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், ஷி அவற்றை மறுத்துள்ளார். இன்றுவரை, கோவிட்-19 வைரஸ் எவ்வாறு தோன்றியது? என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

HKU5-CoV-2 ஆபத்தானதா?: சீன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸைப் போல HKU5-CoV-2 மனித செல்களுக்குள் எளிதில் நுழைவதில்லை.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறன் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸில் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவினாலும் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான மைக்கேல் ஆஸ்டர்ஹோம், இந்த வைரஸ் குறித்த ஆய்வை மிகைப்படுத்த தேவையில்லை என்று கூறியுள்ளார். 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இதே போன்ற SARS வைரஸ்களுக்கு எதிராக மக்களிடம் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸையும் எதிர்த்து செயல்படும் என்று கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+