ஜூன் 1 முதல் பல விதிகள் மாற உள்ளன, இந்த புதிய மாற்றங்கள் மக்களது தினசரி வாழ்க்கையில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த மாற்றங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு, வங்கி விடுமுறைகள், ஆதார் அப்டேட்கள், டிரைவிங் லைசென்ஸ் உள்பட பல அம்சங்களில் மாற்றங்கள் வரவிருக்கின்றன.

புதிய டிரைவிங் லைசென்ஸ் விதிகள்: சாலை போககுவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அண்மையில் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு புதிய விதிமுறைகளை அறிவித்தது. இவை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி அரசு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு பதிலாக தனியார் டிரைவிங் டிரெய்னிங் சென்டர்களில் டிரைவிங் டெஸ்ட்களை எடுக்கலாம். இந்த சென்டர்கள் டெஸ்ட்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. லைசென்ஸுக்கு தகுதி உள்ளவர்களுக்கு சான்றுகளையும் இந்த சென்டர்கள் வழங்கும்.
புதிய விதியின்படி 9 லட்சம் பழைய அரசு வாகனங்களை கழித்து கட்டிவிட்டு மாசுபாட்டை குறைக்கும். வாகனங்களுக்கு கடுமையான மாசுபாடு விதிகளை நிர்ணயிக்கும்.
அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும். மைனர்கள் வண்டி ஓட்டி சிக்கினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக வாகன உரிமையாளர் ஆர்சி புத்தகம் ரத்து செய்யப்படும். பிடிபட்ட மைனர் 25 வயது நிறைவு செய்யும்வரை லைசென்ஸ் பெற தகுதி இல்லை.
ஆதார் கார்டு அப்டேட்: ஜூன் 14 ஆம் தேதிவரை ஆதார் கார்டு அப்டேட்களை செய்யலாம். ஆன்லைன் மூலம் எளிதாக அப்டேட் செய்யலாம். ஆப்லைனில் செய்ய வேண்டுமென்றால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியன்று எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது. ஜூன் 1 ஆம் தேதியன்று கேஸ் கம்பெனிகள் புதிய விலையை நிர்ணியக்கும். மே மாதத்தில் கமர்ஷியல் சிலிண்டர் விலையை நிறுவனங்கள் குறைத்தன.
ஜூன் மாதத்திலும் விலை குறைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல் டீசல், பெட்ரோல் விலை தினந்தோறும் மாறுதலுக்கு உட்படும்.
வங்கி விடுமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட வங்கி விடுமுறை பட்டியலின்படி ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் அடங்கும். அத்துடன் ஜூனில் ராஜா சங்கராந்தி, ஈத் உல் அதா ஆகிய பண்டிகைகளுக்கும் விடுமுறையாகும்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications