கொரோனா பெருந்தொற்றை அத்தனை எளிதாக நம்மால் மறந்துவிட முடியாது. லாக்டவுன் மூலம் கோடிக்கணக்கான மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்க வைத்தது, லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது, பலரது வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்தது. கொரோனா பெருந்தொற்று நம் வீட்டு பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்தது. இன்னமும் கூட அதில் இருந்து நம்மால் மீண்டு வரமுடியவில்லை.
கொரோனா நமக்கு நெருக்கமான பலரது உயிரையும் பறித்தது. அந்த வகையில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் மத்தியில் ஒரு அச்சம் வந்து விடும். இந்த சூழலில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் மாறுபாடு கொண்ட ஒரு வைரஸ் அமெரிக்கா மற்றும் 22 நாடுகளில் பரவி வருகிறதாம். இதனை சிகாடா என்றும் BA.3.2 வைரஸ் என்றும் அழைக்கின்றனர்.

கொரோனா வைரஸின் ஒரு மாறுபட்ட வடிவம் இது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவிலும் மற்ற 22 நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறதாம். திடீரென இந்த வகை வைரஸ் அதிகமானவர்களுக்கு பரவி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போதைக்கு இந்த வகை வைரஸை கண்காணிப்பில் உள்ள வைரஸ் என அறிவித்திருக்கின்றனர். அதாவது இதன் பரவலை வேகமெடுக்கவில்லை இருந்தாலும் இதனை கண்காணிப்பது என்ற நிலையில் உள்ளது.
இது வரை இந்த வைரஸ் பரவல் தீவிர பிரச்சனையாக மாறவில்லை மக்கள் அச்சப்பட வேண்டாம் என உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். முதன்முதலாக 2024 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இந்த சிகாடா வகை கொரோனா கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்கா, ஜெர்மனி , ஆஸ்திரேலியா உட்பட 23க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பரவி இருக்கிறது.
ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸை விட இது வேகமாக பரவுவதாக சொல்லப்படுகிறது. முதன் முதலில் சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உடன் ஒப்பிடும்போது இதன் ஸ்பைக் ப்ரோட்டீனில் 70 லிருந்து 75 மாற்றங்கள் இருக்கின்றனவாம். இந்த மாற்றங்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இடம் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பெரும்பாலும் இதன் அறிகுறியும் தொண்டை வலி, காய்ச்சல் , உடல் சோர்வு, இருமல் , தலைவலி ,மூக்கடைப்பு உள்ளிட்டவையாகவே இருக்கும் என்றும் கூறுகின்றனர். எனவே மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையோடு இருப்பது , வீட்டிற்கு வந்தவுடன் கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது என்கின்றனர்.
ஏற்கனவே ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளிலும் கேஸ், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனோ பரவுவதாக வெளியான தகவல் மக்களை அச்சமடைய வைத்திருக்கிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications