இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை 90%க்கும் அதிகமாக சரிவை கண்டுள்ளது. இதுதொடர்பாக, சமீபத்தில் மக்களவையில் மத்திய அரசு அளித்த பதிலில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 2024-25 நிதியாண்டில் உள்ள ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை 2,419 ஆகக் குறைந்துள்ளது, இதற்கு முன் 2019-20 நிதியாண்டில் 16,388 நிறுவனங்கள் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெரிய வீழ்ச்சிக்கு காரணமாக பொருளாதார சிக்கல்கள், முதலீட்டு குறைவு, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி போன்றவை காரணமாக இருக்கலாம். இருப்பினும், பல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஐடி துறையின் முக்கிய தலைவர்கள், தற்போதைய வணிக மாடல்களை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தி உள்ளனர்.
கார்ப்பரேட் அலுவல்கள் அமைச்சக (MCA) தரவுகளின்படி, கடந்த 24ம் தேதி மக்களவையில் சமர்பிக்கப்பட்ட பதிலில், இந்தியாவின் ஐடி மையமான கர்நாடகாவில், புதிய ஐடி நிறுவனங்கள் உருவாகும் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் கர்நாடகாவில் புதிதாக தொடங்கிய ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை 2020 நிதியாண்டில் 2,544 இலிருந்து 2025 நிதியாண்டில் 212 ஆக 90%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு, Infosys, Wipro போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களின் தலைமையகம் அமைந்துள்ள இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது. அந்தவகையில், பெங்களூரு, "இந்தியாவின் Silicon Valley என அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு பல்லாயிரக்கணக்கான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், மற்றும் மென்பொருள் வளர்ச்சி மையங்கள் செயல்படுகின்றன.
இந்தநிலையில், எவரெஸ்ட் குழுமத்தின் கூட்டாளியான Akshat Vaid, ஐடி துறையில் ஏற்பட்ட கடுமையான சரிவுக்கு பல்வேறு காரணங்கள் ஒன்றிணைந்து பங்களிப்பதாக கூறியுள்ளார். மேலும், சமீப ஆண்டுகளில், புதிய நிறுவனங்களுக்கு சந்தை மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என்றும் இந்த வீழ்ச்சி நீண்டகால பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய அரசியல் நிலையிலான பல மாறுபாடுகளால் ஏற்பட்டு வருவதாக அக்ஷத் வைத் தெரிவித்தார். மேலும், நிறுவங்களில் விருப்ப செலவுகள் மிகக் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எங்கு இருந்தாலும் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், புதிய ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன என்று அவர் கூறினார்.
இதேபோல், மற்றொரு முக்கிய ஐடி மையமான மகாராஷ்டிராவிலும் புதிய ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. நிதியாண்டு 2020 இல் 2,483 ஐடி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், நிதியாண்டு 2025ல் இது 375 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் (TCS - Tata Consultancy Services) மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் அதே நேரத்தில் Tech Mahindra, மகாராஷ்டிராவின் மற்றொரு முக்கிய ஐடி நிறுவனம், புனேவில் அமைந்துள்ளது.
இதனை தொடர்ந்து தெலுங்கானாவிலும் புதிய ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. நிதியாண்டு 2020ல் 2,077 ஐடி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், நிதியாண்டு 2025ல் இது வெறும் 233 ஆக குறைந்துள்ளது. தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத், பல்வேறு ஐடி நிறுவனங்களுக்கு முக்கிய மையமாக இருக்கிறது. அதன்படி, நடுத்தர அளவிலான ஐடி நிறுவனமான Cyient இதே நகரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது, Akshat Vaid கூறியதுபோலவே, செயற்கை நுண்ணறிவு ஐடி சேவைகளின் அமைப்பை முழுவதுமாக மாற்றி வருகிறது. AI வளர்ச்சி, பாரம்பரிய ஆற்றல் செலவு குறைப்புக்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு அவுட்சோர்சிங் மற்றும் பணியாளர் சார்ந்த அளவிடுதல் போன்ற மாடல்களுக்கு நேரடி சவாலாக மாறியுள்ளது. இதற்கு இணையாக, 2021-இல் முதலீடு உச்சத்தை எட்டிய பின்னர், ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான முதலீடுகள் கடுமையாக சரிவடைந்துள்ளது. இருப்பினும், இந்த ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சி பெரிய மாநிலங்களுக்கு மட்டுமல்ல, சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் புதிய ஐடி நிறுவனங்கள் மிகக் குறைவாக உருவாகியுள்ளன.
புதிய ஐடி நிறுவனங்கள் உருவாகும் வீதம் குறைவதுடன், மூடப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அரசு வெளியிட்ட தரவுகளின்படி, நிதியாண்டு 2025-ல் மட்டும் 2,300 ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கர்நாடகாவில் மட்டும் 440 நிறுவனங்கள் மூடப்பட்டன. மகாராஷ்டிராவில் 459 நிறுவனங்கள் முடங்கின. இதேபோல், 2020 நிதியாண்டில், 9,100க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டன. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் சில ஆண்டுகளில் அதிக வருவாய் ஈட்டப்பட்டிருந்தாலும், ஐடி துறையில் சீரற்ற வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
{embed-poll}
இந்தியாவின் இரண்டு பெரிய ஐடி சேவை நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் எச்.சி.எல்.டெக் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் காரணமாக, ஐடி வணிக மாடல்கள், தற்போது செயல்பட முடியாத நிலையை அடைந்துவிட்டன என எச்சரித்துள்ளன. இதுகுறித்து HCLTech CEO விஜய்குமார் கூறியதாவது, ஐடி துறையில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் காரணமாக, கடந்த 30 ஆண்டுகளாக வளர்ச்சி கண்ட நிலையில், இனிமேல், இந்த பாரம்பரிய வளர்ச்சி முறை செயல்பட முடியாது ஏனென்றால், "ஐடி சேவைகளின் பாரம்பரிய வணிக மாதிரி முடிவுக்கு வந்துவிட்டது" என்று கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதி பணியாளர்களை கொண்டு இரு மடங்கு வருவாயை எப்படி ஈட்டலாம் என்பது குறித்து எங்கள் குழுக்களுக்கு நாங்கள் சவால் விடுத்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ஐடி துறையில் இந்தியாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. இந்தியாவில் பெரும் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தை உயர்த்திய ஒரு துறையெனில் அது ஐடி சேவைத் துறை தான், கடந்த 15 வருடத்தில் ஐடி துறையில் பணியில் சேர்வது தான் இந்திய இளைஞர்களின் முக்கிய இலக்காக உள்ளது. மேலும், இந்தத் துறை வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மென்பொருள் ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்களிப்பைக் கொண்டு உள்ளது. ஐடி துறை இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாக இருப்பதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல், ஐடி துறை டிஜிட்டல் மயமாக்கலை பணிகளை உலகம் முழுவதும் செய்து வருவது மட்டும் அல்லாமல், புதிய வணிக மாதிரிகளை உருவாக்கித் தொடர்ந்து டாலர் வருமானத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பெரிய பங்கீட்டை வகிக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை 90%க்கும் அதிகமாக சரிவை கண்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications