புதிய நிறுவனங்கள் பதிவு 11% சரிவு.. ஆனா LLP பதிவு 21% உயர்வு..

டெல்லி: இந்தியாவில் புதிய வர்த்தகம் துவங்குவோர் எண்ணிக்கை ஜூன் மாதம் 12% அதிகரித்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தில் புதிய நிறுவன பதிவுகள் கிட்டத்தட்ட 11% குறைந்துள்ளதாக மத்திய கார்ப்ரேட் விவகாரத் துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டை காட்டிலும் முதலீட்டுச் சந்தையில் சாதகமற்ற சூழ்நிலை இருக்கும் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 14,887 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட 16,698 குறைவு.

புதிய நிறுவனங்கள் பதிவு 11% சரிவு.. ஆனா LLP பதிவு 21% உயர்வு..

இதன்மூலம், 2023-24ம் நிதியாண்டில் புதிய நிறுவனங்கள் பதிவு வரலாற்று உச்ச அளவீட்டைப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மூன்று மாதங்களில் புதிய நிறுவன பதிவுகள் குறைந்துள்ளன. இருப்பினும், 14,000-க்கும் அதிகமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை நீண்ட கால சராசரி அளவை விட அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் லிமிடெட் லைபிலிட்டி பார்ட்னர்ஷிப் (எல்எல்பி) பதிவுகள் இந்த நிதியாண்டில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. மே மாதத்தில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியைத் தவிர, ஜூலை மாதத்தில் எல்எல்பி பதிவுகள் வருடாந்திர அடிப்படையில் 21% அதிகரித்து 5,896 ஆக உள்ளன.

எல்எல்பி என்றால் என்ன?: லிமிடெட் லைபிலிட்டி பார்ட்னர்ஷிப் (LLP) என்பது ஒரு வகையான வணிக அமைப்பு ஆகும். இதில் பங்குதாரர்களின் பொறுப்பு குறைவாக இருக்கும், அதாவது ஒரு பங்குதாரரின் தவறு அல்லது கடன் காரணமாக மற்ற பங்குதாரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

எல்எல்பி தனிச் சட்டப் பிரிவில் உருவாக்கப்பட்ட அமைப்பு. இதன் மூலம் பங்குதாரர்கள் மாறினாலும் நிறுவனம் தொடர்ந்து இயங்க முடியும். எல்எல்பி நிறுவனத்தில் இருக்கும் பங்குதாரர்கள் தங்களுடைய சொந்த பெயரில் சொத்துக்களை வைத்திருக்க முடியும் மற்றும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள முடியும்.

எல்எல்பி-யில் பங்குதாரர்களின் பொறுப்பு குறைவாக உள்ளது. ஒரு பங்குதாரரின் செயல்களால் மற்ற பங்குதாரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு பங்குதாரரும் தங்களது முதலீட்டிற்கு மட்டுமே பொறுப்பாவார்கள்.

பங்குதாரர்களுக்கிடையேயான உரிமைகள் மற்றும் கடமைகள் பங்குதாரர்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். எல்எல்பி என்பது ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் கூட்டுத் தொழில் கட்டமைப்பின் கூட்டு பயன்களை அளிக்கக்கூடியது. இதனாலேயே இது நிறுவனம் மற்றும் கூட்டுத் தொழிலுக்கு இடையேயான ஒரு கலப்பினம் என்று அழைக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+