பல வங்கிகள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றி அமைத்துள்ளன. இந்த மாற்றங்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாற்றங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த வாரத்தில் இந்தத் திருத்தங்களை அறிவித்த வங்கிகளில் HDFC பேங்க், IDFC FIRST பேங்க் மற்றும் ICICI பேங்க் ஆகியவை அடங்கும். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சேவைக் கட்டணம்: HDFC வங்கி கிரெடிட் கார்டு கட்டணங்கள், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. நீங்கள் CRED, PayTM, Cheq, MobiKwik, Freecharge போன்ற சேவைகளைப் பயன்படுத்தினால், பரிவர்த்தனைத் தொகையில் 1 % கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 3000 வரை இந்தக் கட்டணம் இருக்கலாம்.

பெட்ரோல் பேமெண்ட்: கன்ஸ்யூமர் கிரெடிட் கார்டைக் கொண்டு ரூ.15,000-க்கும் குறைவாக பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் எந்த வித கட்டணமும் இல்லை. ஆனால் 15,000 ரூபாய்க்கு அதிகமாக பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் மொத்தத் தொகையில் 1% கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3000 வரை விதிக்கப்படும்.
பிசினஸ் கார்டுகள்: பிசினஸ் கார்டுகளை வைத்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.30,000-க்கும் குறைவாக பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால் ரூ.30,000-க்கும் அதிகமாக வாங்கினால் 1% கட்டணம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3000 வரை கட்டணம் விதிக்கப்படும்.
சர்வதேச பரிவர்த்தனை: சர்வதேச அல்லது வெளிநாட்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு 3.5% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இன்ஃபினியா, இன்ஃபினியா மெட்டல் எடிஷன், டைனர்ஸ் பிளாக், டைனர்ஸ் பிளாக் மெட்டல் எடிஷன், பிஸ் பிளாக் மெட்டல் கார்டு, ரெகாலியா கோல்ட், பிஸ் பவர், டாட்டா நியூ இன்ஃபினிட்டி போன்ற HDFC பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ஏற்கனவே இருக்கும் 2% கட்டணம் அப்படியே தொடரும். 6E ரிவார்ட்ஸ் இண்டிகோ எக்ஸ்எல் கார்டுக்கு 2.5% கட்டணம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
HDFC பேங்க் கிரெடிட் கார்டு லாயல்டி திட்டம்: HDFC பேங்க் சில கிரெடிட் கார்டுகளில் கிரெடிட் கார்டு லாயல்டி திட்டத்தை மாற்றியுள்ளது. புதிய விதிகள் செப்டம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வருகின்றன. அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த செய்தி மெயில் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
IDFC FIRST பேங்க் கிரெடிட் கார்டு மாற்றங்கள்: IDFC FIRST பேங்க் தனது கிரெடிட் கார்டு கட்டண விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் குறைந்தபட்ச கட்டணத் தொகை (MAD) மற்றும் கட்டண தேதி மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த மாற்றங்கள் செப்டம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று IDFC FIRST பேங்க் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MAD செலுத்துதலில் திருத்தம்: முன்பு, IDFC FIRST பேங்க் உங்கள் கடன் தொகையில் 5%-ஐ MAD ஆகக் கணக்கிடும். ஆனால், செப்டம்பர் 2024 முதல், இந்த சதவிகிதம் 2% ஆகக் குறைக்கப்படுகிறது. அதாவது, உங்கள் கடன் தொகையில் 2% மட்டுமே MAD கட்டணமாக இருக்கும்.
கட்டண தேதி: முந்தைய 18 நாட்களுக்கு பதிலாக, IDFC FIRST பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டண தேதியை அறிக்கை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களாக குறைத்துள்ளது.
பழைய கட்டணத் தேதி: அறிக்கை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 18 நாட்கள்
புதிய கட்டணத் தேதி: அறிக்கை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள். இனி 15 நாட்களில் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.
ICICI பேங்க் டெபிட் கார்டு விதிகள்: ICICI பேங்க் குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளில் விமான நிலைய ஓய்வறைகளைப் பயன்படுத்தும் விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
அக்டோபர் 1, 2024 முதல் விமான நிலைய ஓய்வறைகளுக்கு முந்தைய காலாண்டில் ரூ. 10,000 செலவழித்திருந்தால், 2 முறை இலவசமாக ஓய்வறைகளைப் பயன்படுத்த முடியும்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலாண்டில் இலவச விமான நிலைய ஓய்வறைகளைப் பயன்படுத்த தகுதி பெறுவது எப்படி?: அக்டோபர்- நவம்பர்- டிசம்பர் 2024 காலாண்டில் இலவச விமான நிலைய ஓய்வறைகளைப் பயன்படுத்த, ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2024 காலாண்டில் குறைந்தது ரூ.10,000 செலவிட வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications