இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டன. அதிலும் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் சூழலும் நிலவுகிறது. அப்படி உங்களிடமும் பல கிரெடிட் கார்டுகள் இருந்தால்.. தேவையற்ற கிரெடிட் கார்டுகளை உங்களால் மூட முடியும். பயன்படுத்தாத கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால் அவற்றுக்கு வருடாந்திர கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் என தேவையின்றி நீங்கள் செலவு செய்ய வேண்டி வரலாம். எனவே இந்த பதிவில் ஒரு கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் எப்படி மூடுவது?, அதற்கான RBI விதி என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
சில வங்கிகள் வாடிக்கையாளர்களே நேரில் சென்று கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்ய கூறும்போது தயக்கம் காட்டுகின்றன. இது போன்ற வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆர்பிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆர்பிஐ-யின் விதிமுறை: கிரெடிட் கார்டை மூடுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி தெளிவான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின் படி ஒரு வாடிக்கையாளர் தங்கள் கிரெடிட் கார்டை மூடுவதற்காக கோரிக்கை வைக்கும் போது அந்த வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் கோரிக்கையை 7 நாட்கள் முடிவதற்குள் செயல்படுத்தியாக வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் கிரெடிட் கார்டை மூடவில்லை என்றால் வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்குனர் ஒரு நாளைக்கு 500 ரூபாய் அபராதத்தை வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்.
ஆனால் கிரெடிட் கார்டை மூடுவதற்காக கோரிக்கை வைக்கும் போது உங்கள் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகை எதுவும் இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஏதேனும் பில் செலுத்த வேண்டியிருந்தால் அவற்றை செலுத்தி விட்டு அதன் பிறகு உங்களுடைய கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். அவ்வாறு இருந்தால் மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும்.
உங்களுடைய கிரெடிட் கார்டை மூடுவது எப்படி?: கிரெடிட் கார்டை மூடுவது சிக்கலான விஷயம் அல்ல. மிகவும் எளிதான செயல்முறையே உங்கள் கிரெடிட் கார்டை மூடுவதற்கு முன் மீதமுள்ள நிலுவைத் தொகையை முதலில் செலுத்துங்கள்.
தொகை சிறிதாக இருந்தாலும்.. அதிகமாக இருந்தாலும் நிலுவைத் தொகை எதுவும் தீர்க்கப்படாமல் கார்டு மூடப்படாது. உங்களுடைய ரிவார்ட் பாய்ண்டுகளை பயன்படுத்துங்கள். உங்களுடைய கார்டை மூடுவதற்கு முன்பு உங்களுடைய ரிவார்ட் பாயிண்ட்டுகளை பயன்படுத்தி விடுங்கள்.
உங்கள் கிரெடிட் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ள காப்பீட்டு பிரீமியங்கள், OTT சேவைகள் போன்ற மாதாந்திர சந்தாக்கள் அல்லது தொடர்ச்சியான கட்டணங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுடைய கிரெடிட் கார்டு மூடப்பட்டவுடன் இந்த மாதாந்திர ஆட்டோமேட்டிக் கட்டணங்கள் நிறுத்தப்படலாம். ஒரு வேலை இது மாதாந்திர EMI தவணையாக இருந்தால் சில நிதி சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயங்கள் உள்ளன.
உங்கள் கிரெடிட் கார்டை மூட விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிவிக்க உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையை அழைக்கவும். வங்கி சில அடிப்படை தகவல்களைக் கேட்கும் மற்றும் கிரெடிட் கார்டை மூடுவதற்கான காரணத்தைப் பற்றி விசாரிக்கலாம். இது முடிந்ததும், அவர்கள் கோரிக்கையை செயல்படுத்துவார்கள்.
உங்கள் கோரிக்கை செயல்படுத்தப்பட்ட பிறகு, கார்டை தூக்கி எறிய வேண்டாம். கிரெடிட் கார்டை அப்புறப்படுத்துவதற்கு முன் அதை குறுக்காக வெட்டுங்கள். இது உங்கள் தனிப்பட்ட தகவலை பிறர் மோசடியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.
இந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கிரெடிட் கார்டை திறம்பட நிர்வகிக்கலாம் மற்றும் எதிர்காலக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். புதிய ரிசர்வ் வங்கியின் விதிகள், செயல்முறை விரைவாகவும், தொந்தரவில்லாததாகவும் இருப்பதை உறுதிசெய்கிறது, வாடிக்கையாளர்கள் தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்க உதவுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications