செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் HDFC பேங்க் கிரெடிட் கார்டுகளில் சில புதிய விதிகள் அமல்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் யூட்டிலிட்டி பேமண்ட்களில் இருந்து பெறப்படும் ரிவார்டு பாயிண்டுகளுக்கு வரம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதத்திற்கு 2000 ரிவார்டு பாயிண்டுகள் வரை மட்டுமே ஒருவர் பெற முடியும். இந்த வரம்பு குறிப்பிட்ட செலவு வகைகளில் ரிவார்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.
டெலிகாம் மற்றும் கேபிள் பரிவர்த்தனை ரிவார்ட் லிமிட்: HDFC பேங்க், டெலிகாம் மற்றும் கேபிள் பேமெண்ட்டுகளுக்கான ரிவார்டு பாயிண்டுகளின் வரம்பை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. இந்த பரிவர்த்தனைகள் மூலம் மாதத்திற்கு அதிகபட்சம் 2,000 ரிவார்ட் பாயிண்டுகள் வரை மட்டுமே வழங்கப்படும். பல்வேறு செலவுகளில் சமமான கிரெடிட் கார்டு பயன்பாட்டை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி கட்டணங்களுக்கு ரிவார்ட் இல்லை: அதேபோல வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், கல்வி சேவைகளுக்கான மூன்றாம் தரப்பு தளங்களின் மூலம் செய்யப்படும் கட்டணங்களுக்கு ரிவார்டுகள் கிடையாது. கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் அல்லது POS அமைப்புகளின் மூலம் நேரடியாக கட்டணம் செலுத்தினால் ரிவார்டுகள் கிடைக்கும்.
IDFC FIRST பேங்க் கிரெடிட் கார்டு மாற்றங்கள்: IDFC FIRST பேங்க் தனது கிரெடிட் கார்டு கட்டண விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் குறைந்தபட்ச கட்டணத் தொகை (MAD) மற்றும் கட்டண தேதி மாற்றங்கள் ஆகியவை அடங்கும். இந்த மாற்றங்கள் செப்டம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று IDFC FIRST பேங்க் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MAD செலுத்துதலில் திருத்தம்: முன்பு, IDFC FIRST பேங்க் உங்கள் கடன் தொகையில் 5%-ஐ MAD ஆகக் கணக்கிடும். ஆனால், செப்டம்பர் 2024 முதல், இந்த சதவிகிதம் 2% ஆகக் குறைக்கப்படுகிறது. அதாவது, உங்கள் கடன் தொகையில் 2% மட்டுமே MAD கட்டணமாக இருக்கும்.
கட்டண தேதி: முந்தைய 18 நாட்களுக்கு பதிலாக, IDFC FIRST பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டண தேதியை அறிக்கை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களாக குறைத்துள்ளது. பழைய கட்டணத் தேதி: அறிக்கை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 18 நாட்கள் புதிய கட்டணத் தேதி: அறிக்கை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள். இனி 15 நாட்களில் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.
RuPay கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்டுகள்: செப்டம்பர் 1, 2024 முதல், ருபே கிரெடிட் கார்டு பயனாளர்கள் UPI பரிவர்த்தனைகளுக்கு பிற கிரெடிட் கார்டு நெட்வொர்க்குகளிலிருந்து பெறப்படுவதைப் போன்ற ரிவார்டுகளைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications