டிசிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அலுவலகத்தில் இந்து ஊழியர்கள் டார்கெட் செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு மூளை சலவை செய்யப்பட்டு கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுவதாக புகார்கள் வந்தன. இதனை அடுத்து காவல்துறையினர் அண்டர் கவர் ஆபரேஷன் நடத்தி உண்மையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட ஊழியர்களை கைது செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் அலுவலகத்தில் மதமாற்றமா , கார்ப்பரேட் ஜிகாத் நடக்கிறதா என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். நாடு முழுவதுமே இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் விவாதிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த சூழலில் எப்படி நாசிக் அலுவலக ஊழியர்கள் படிப்படியாக இந்துவிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறித்து வெளியாகி இருக்கக்கூடிய ஒவ்வொரு தகவலும் நம்மை அதிர வைக்கிறது.
குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்கள் முதலில் அனைவரிடமும் நட்பாக பழகுவார்களாம். அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்வார்களாம். இதில் நிதி சிக்கல் குடும்ப பிரச்சினை உள்ளவர்களை இலக்கு வைப்பார்களாம். அந்த வகையில் ஒரு ஊழியர் கோபால் என பெயர் கொண்டிருந்த ஒரு ஊழியர் படிப்படியாக இந்துவாக இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி தன் பெயரையே குல்ஷன் என மாற்றியுள்ளார். தன்னுடைய அடையாளத்தையே அவர் மாற்று அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளார்.
கோபால் என்ற பெயரில் வேலை செய்து வந்த ஒரு ஊழியர் கடந்த சில மாதங்களாகவே குடும்பத்தினருடன் உரையாடுவதையே நிறுத்தி இருக்கிறார் அதேபோல தன்னுடைய பழைய நண்பர்களுடன் பேசுவதையும் முற்றிலுமாக தவிர்த்து இருக்கிறார். தினம் தோறும் வீட்டிலேயே நமாஸ் செய்வது இஸ்லாம் மதம் குறித்து அதிகமாக பேசுவது என அவருடைய நடவடிக்கையே மாறி இருக்கிறது. இறுதியாக குல்ஷன் என தன்னுடைய பெயரையே அவர் மாற்றி இருக்கிறார்.
இது ஒரே நாளில் நடந்த மாற்றமில்லை என விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த அலுவலகத்தில் வேலை செய்த பல்வேறு ஊழியர்களின் நடத்தைகளிலும் இது போன்ற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்தினருடன் கலந்துரையாடாமல் இருப்பது, பழைய நண்பர்களை தவிர்ப்பது, இதற்கு முன்பு கடைபிடித்து வந்த சடங்குகள் எதையும் பின்பற்றாமல் இருப்பது, இஸ்லாம் மதம் குறித்து பெருமையாக பேசுவது உள்ளிட்டவை தான் இவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட மாற்றங்கள் என குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது இந்த கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய மூளையை அவர்களுக்கே தெரியாமல் இஸ்லாம் மதத்தை நோக்கி மாற வைத்துள்ளது. இதனிடையே என்டிடிவிக்கு பேட்டி அளித்துள்ள இந்த நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் பெண் ஒருவர் அலுவலக ஆண் நண்பர்கள் இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதம் மாற்று என வெளிப்படையாகவே பேசிக்கொள்வார்கள், அவர்களுக்கு இதற்காக நிதி கூட வருவதாக பேசிக் கொண்டார்கள் என கூறியுள்ளார்.
இதற்கிடையே காவல்துறையினர் இவர்கள் ஒரு ஆர்கனைஸ்டு கேங் போல செயல்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். இவர்களின் இலக்கே 21 முதல் 25 வயது உட்பட்ட பெண்கள் தானாம். இவர்களிடம் நெருங்கி பழகி சக ஊழியர்களோடு பேச விடாமல் உணர்வு ரீதியாக தனிமைப்படுத்தி இன்ஃப்ளூயன்ஸ் செய்வதில் இந்த கேங்கை சேர்ந்தவர்கள் கை தேர்ந்தவர்களாக பயிற்சி பெற்றுள்ளனர் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

