Driving Licence பெறுவதில் புதிய விதிமுறை.. மத்திய அரசு கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்…!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் , ஓட்டுநர் உரிமம் வழங்குவது மற்றும் அது தொடர்பான சேவைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இதற்கான புதிய வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது, Learner's Licence பெறுவதற்கான ஆன்லைன் ஓட்டுநர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றால் போதும். ஆனால், புதிய விதிகளின்படி இந்த தேர்ச்சி மதிப்பெண் 60%-இல் இருந்து 75% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. எனவே ஓட்டுநர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெறுவது இனி சற்று கடினமாக மாறலாம்.

Driving Licence பெறுவதில் புதிய விதிமுறை.. மத்திய அரசு கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்…!!

ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் சில குறிப்பிட்ட ஓட்டுநர் உரிம சேவைகளுக்கு கட்டணங்களை முழுமையாக நீக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, லைசென்ஸில் பெயர், முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை மாற்றுவதற்கான கட்டணங்கள் குறைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யலாம் என வரைவு விதியில் கூறியுள்ளது.

ஓட்டுநர் உரிமத்தில் பெயர் அல்லது பிற விவரங்களை மாற்ற கோரி விண்ணப்பித்தால், சம்மந்தப்பட்ட உரிம வழங்கும் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்த முடிவை எடுக்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை அதிகாரிகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read

முகவரி மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால், அந்த விண்ணப்பம் தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். முகவரி சான்றுக்காக சமர்ப்பிக்கப்படும் மின்சார கட்டண ரசீது அல்லது மற்றும் வீட்டு எரிவாயு இணைப்பு ரசீது ஆகியவை மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது என கூறியுள்ளது.

மேலும் அடையாள சான்று, வயது மற்றும் இருப்பிடத்திற்கு ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் ஆகியவை ஏற்கப்படும். அதே சமயம், எல்ஐசி பாலிசி இனி முகவரி சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது.

Recommended For You

சாரதி போர்ட்டலில் விண்ணப்பிக்கும்போது, ஏற்கனவே பதிவில் உள்ள தகவல்களை தானாகவே பூர்த்தி செய்யும் வசதி கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மீண்டும் மீண்டும் ஒரே தகவலை நிரப்பும் சிரமம் தவிர்க்கப்படும். ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் , நகல் லைசென்ஸ் பெறுதல் மற்றும் புதிய வாகன வகையை இணைத்தல் போன்றவற்றுக்கு தனித்தனி படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

தற்போது இவை அனைத்தும் மத்திய அரசால் வெளியிடப்பட்ட வரைவு விதிகளாக மட்டுமே உள்ளன. இது குறித்து பொதுமக்கள் கருத்துக்களும் ஆட்சேபனைகளும் கோரப்பட்டுள்ளன. இன்னும் 30 நாட்களுக்குள் மக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். பொதுமக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த விதிகள் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+