ஈகாமர்ஸ் சந்தையில் குழாயடி சண்டை.. புதிய கட்டுப்பாடு மூலம் போட்டி கடுமையானது..!

இந்தியாவில் நாளுக்கு நாள் ஈகாமர்ஸ் வர்த்தகச் சந்தைக்கான கட்டுப்பாடுகள் கடுமையாகி வருகிறது. குறிப்பாகச் சமீபத்தில் அதிரடி தள்ளுபடி விற்பனைக்குத் தடை, விற்பனை பொருட்களின் ஆர்ஜின் எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் காரணத்தால் ஈகாமர்ஸ் சந்தையில் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது இந்தச் சக நிறுவனங்களுக்கு மத்தியிலான போட்டி என்பதைத் தாண்டி, இந்திய நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மத்தியிலான போட்டியாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.

இந்திய ஈகாமர்ஸ் சந்தை

இந்திய ஈகாமர்ஸ் சந்தை

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் தற்போது பெரிய நிறுவனமான உருவெடுத்திருக்கும் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ், டாடா குரூப் ஆகிய நிறுவனங்கள் மத்தியில் தான் பெரும் போட்டி உருவாகியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட கட்டுப்பாடுகள் இத்துறை நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

குறிப்பாக வென்டார் நிறுவனத்திடம் வைத்துள்ள மறைமுக உரிமை (ownership), சொந்த பிராண்டுகள், பிளாஷ் சேல் போன்றவை இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்கள் (ரிலையன்ஸ், டாடா குரூப்) மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான (அமேசான், பிளிப்கார்ட்) மத்தியில் பெரும் போட்டியை உருவாக்கியுள்ளது என வெளிநாட்டு ப்ரோகரேஜ் நிறுவனமான ஜெப்ரீஸ் தெரிவித்துள்ளது.

பி2பி மற்றும் சிங்கிள் பிராண்ட் வர்த்தகம்

பி2பி மற்றும் சிங்கிள் பிராண்ட் வர்த்தகம்

இந்தியாவில் பி2பி மற்றும் சிங்கிள் பிராண்ட் வர்த்தகத்திற்கு நிலையான வர்த்தக வடிவமுறை உள்ளது. ஆனால் அதீத அன்னிய முதலீட்டில் இயங்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு முறையான நடை முறை இல்லை. இது தான் ஈகாமர்ஸ் வர்த்தகச் சந்தைக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் பிரச்சனை.

மார்கெட்பிளேஸ் வர்த்தகம்

மார்கெட்பிளேஸ் வர்த்தகம்

மார்கெட்பிளேஸ் வர்த்தகத்திற்கு இந்தியாவில் 100 சதவீதம் அன்னிய முதலீடுகளுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் முறையான வர்த்தக நடைமுறைகள் இல்லாத காரணத்தால் 2018 முதல் மத்திய அரசு தொடர்ந்து புதிய நடைமுறைகளும், கொள்கை மாற்றங்களும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

அமேசான் விற்பனை

அமேசான் விற்பனை

மேலும் இந்தக் கட்டுப்பாடுகளால் அமேசான் தனது செல்லர் நிறுவனத்தின் வைத்திருந்த பங்குகளை அதிகளவில் குறைந்துள்ளது. இதோடு இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்களை அதிகளவில் பாதிக்கிறது எனவும் ஜெப்ரீஸ் தெரிவித்துள்ளது.

2018 முதல்

2018 முதல்

2018 முதல் ஈகாமர்ஸ் துறையில் கொள்கை மறுசீரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், 2020 ஜூலை மாதத்தில் நுகர்வோர் விருப்பத்தைப் பாதுகாக்கவும், 2021ல் வென்டார் நிறுவனத்திடம் வைத்துள்ள மறைமுக உரிமை (ownership), சொந்த பிராண்டுகள், பிளாஷ் சேல் போன்றவற்றில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்திய ரீடைல் சந்தை

இந்திய ரீடைல் சந்தை

இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் தனது வர்த்தகக்தை அதிகரிப்பதன் மூலம் இந்தக் கட்டுப்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என நம்பும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் ரிலையன்ஸ் வந்த பின்பு இத்துறையில் போட்டியின் அளவீட்டு சற்று கூடுதலாகவே உள்ளது. குறுகிய காலகட்டத்தில் ரிலையன்ஸ் பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+