தர்மேந்திர பிரதான் இடத்துக்கு வந்த பிரகலாத் ஜோஷி-யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாசம் பொறந்தா வங்கி கணக்கில்..

CJP தலைமையிலான ஜென்Z இளைஞர்களின் போராட்டம் டெல்லியை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே ஒரு உலுக்கி உலுக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த போராட்டத்தை கலைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இளைஞர்கள் தங்களுடைய இலக்கில் உறுதியாக இருந்த காரணத்தால் நீட் தேர்வு முறைகேடுகள் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார், இவருடைய ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த இடத்துக்கு பிரகலாத் ஜோஷி கூடுதல் பொறுப்பாளராக வந்துள்ளார்.

தர்மேந்திர பிரதான் இடத்துக்கு வந்த பிரகலாத் ஜோஷி-யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாசம் பொறந்தா வங்கி கணக்கில்..

பிரகலாத் ஜோஷி 2024 முதல் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகவும் , மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் புதிய கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரகலாத் ஜோஷி-யின் சம்பளம், கொடுப்பனவு, இதர சலுகைகள் குறித்து சமுக வலைத்தளத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படி பிரகலாத் ஜோஷி கல்வித்துறை அமைச்சராக எவ்வளவு தான் சம்பளம் வாங்குகிறார்..?

Also Read

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷிக்கு பல்வேறு வகையில் சலுகைகள் கிடைக்கிறது. அதில் முக்கியமானதும், முதன்மையானதும் சம்பளம். கல்வித்துறை அமைச்சராக மாதம் அடிப்படை சம்பளமாக 1 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார் பிரகலாத் ஜோஷி.

அதை தொடர்ந்து தொகுதி வாரியான கொடுப்பனவு அடிப்படையில் மாதம் 70000 ரூபாய் தொகுதி தொடர்பான விஷயங்களுக்கு செலவு செய்ய அளிக்கப்படுகிறது. அலுவலக செலவுகளுக்காக அளிக்கப்படும் கொடுப்பனவு மாதம் 60000 ரூபாய், தினசரி நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு தினமும் 2000 ரூபாய் கொடுப்பனவு அளிக்கப்படுகிறது.

Recommended For You

இதை தாண்டி அரசு சார்பில் டெல்லியில் பிரகலாத் ஜோஷி தங்குவதற்கு Lutyens பகுதியில் ஒரு வீடு அளிக்கப்படுகிறது. வீட்டையும், அலுவலகத்தையும் நிர்வாகம் செய்ய ஊழியர்களையும் அரசு செலவில் அளிக்கப்படுகிறது. இதை தாண்டி பிரகலாத் ஜோஷி தனி வாகனம், எரிபொருள், அவருக்கான பாதுகாப்பு + வாகனம் என மொத்த போக்குவரத்து செலவுகளையும் அரசு சார்ப்பில் அளிக்கப்படுகிறது.

இதோடு விமான மற்றும் ரயில் பயணத்தில் முதல் நிலை டிக்கெட், இவருடன் பயணிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கான செலவுகளையும் அரசு ஏற்கிறது. இதை தாண்டி அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்திற்கான ஹெல்த் இன்சூரனஸ், பர்சனல் அசிஸ்டென்ட் + தனி செயலாளர்களுக்கான சம்பளம், போன், இண்டர்நெட் போன் தொலைத்தொடர்பு சேவைக்கான செலவுகளையும் அரசு ஏற்கிறது.

இதுவரையில் பிரகலாத் ஜோஷியின் சம்பளம் குறித்து பார்த்தோம்.. இவர் என்பது குறித்து பலருக்கும் தெரியாமால் உள்ளது. யார் இந்த பிரகலாத் ஜோஷி?

1962ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பிஜப்பூர் பகுதியில் பிறந்த பிரகலாத் ஜோஷி ஹூபாலியில் கல்வியை முடிந்தார். முழுநேர அரசியலுக்கு வரும் முன்பு பிரகலாத் ஜோஷி பல்வேறு வர்த்தகத்தில் ஈடுப்பட்டு இருந்து, பிஜேபியில் இணைந்து முக்கிய தலைவராக உருவெடுத்து தற்போது நாட்டின் 3 முக்கிய துறையின் அமைச்சராக உள்ளார்.

பிரகலாத் ஜோஷி கர்நாடக மாநிலத்தின் தார்வாட் தொகுதியில் இருந்து 5 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 2004 முதல் இத்தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் பிரகலாத் ஜோஷி 2019ல் இருந்து பல்வேறு துறையின் அமைச்சராக இருந்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+