டோல் கட்டணம் செலுத்த மற்றும் டோல் கேட்டுகளில் நெரிசலைக் குறைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட FASTag-க்கான புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் படி, குறிப்பாக FASTag-க்கான KYC சரிபார்ப்பை செய்திருக்க வேண்டும். இது ஆகஸ்ட் 1 முதல் கட்டாயமாகும். ஏற்கனவே பல விதிகள் இருந்தாலும், FASTag-க்கான புதிய KYC விதிமுறை கட்டாயமாக்கப்பட உள்ளது.
FASTag KYC: FASTag புதிய விதிகளின்படி, KYC அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். FASTag சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து FASTagகளுக்கும் KYC ஐ அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும், இந்த செயல்முறை ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்குகிறது. FASTag வாடிக்கையாளர்கள் NPCI வழிகாட்டுதல்களின்படி இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் KYC புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

பழைய வாகன உரிமையாளர்களுக்கான முக்கியமான அப்டேட்: ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், நிறுவனங்கள் NPCI உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும். இதில் 3 முதல் 5 ஆண்டுகள் பழமையான FASTag-களுக்கான KYC-ஐப் புதுப்பித்தல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவற்றை அக்டோபர் 31-க்குள் மாற்றுதல் ஆகியவை அடங்கும். வாகன உரிமையாளர்கள் தங்கள் KYC-ஐ அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டியது அவசியம்.
ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்:
1. 5 ஆண்டுகள் பழமையான FASTags மாற்றுதல்
2. 3 வருட FASTags-க்கான KYC புதுப்பிப்பு
3. வாகன பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணை FASTag உடன் இணைத்தல்.
4. புதிய வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் பதிவு எண்ணை புதுப்பித்தல்.
5. FASTag வழங்குநர்கள் தங்கள் தரவுத்தளங்களை சரிபார்க்க வேண்டும்.
6. காரின் முன் மற்றும் பக்க புகைப்படங்களை தெளிவாக பதிவேற்றுதல்.
7. FASTag ஒரு மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்.
8. KYC தேவைகளை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்தல்.
FASTag-க்கான புதிய விதிமுறைகள் விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதால், வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTag விவரங்களை புதுப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும். KYC விவரங்களை சரிபார்த்தல், பழைய FASTag களை மாற்றுதல் மற்றும் வாகன விவரங்களை இணைத்தல் போன்ற நடவடிக்கைகளை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதன் மூலம் டோல் கட்டணம் செலுத்தும் செயல்முறை மேம்பட்டு, போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications